தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகை காஜல் அகர்வால். தமிழில் மட்டும் இன்றி தெலுங்கு இந்தி மொழி திரைப்படங்களிலும் அவர் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். நடிகை காஜல் அகர்வால் தமிழில் பழனி நான் மகான் அல்ல மாற்றான் துப்பாக்கி ஜில்லா விவேகம் கோமாளி இந்தியன் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
குறிப்பாக திருமணத்துக்கு பிறகும் நடிகை காஜல் அகர்வால் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரப்படும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போத சாகர் பி ஷிண்டே தயாரிப்பில் டி கே சேட்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள தி இந்தியா ஸ்டோரி படத்தில் நடித்திருக்கிறா்.
இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஸ்ரேயாஷ் தல்படே உடன் காஜல் அகர்வால் இணைந்து நடித்துள்ளார். ஜி ஸ்டூடியோ வெளியிடும் இந்த படம் தமிழ் தெலுங்கு இந்தி ஆகிய மொழிகளில் வரும் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை காஜல் அகர்வால் பிகினி ஆடைகளில் வருவது, நெருக்கமான காட்சிகளில் நடிப்பது குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அப்போது காஜல் அகர்வால் கூறியதாவது, எனக்கு பிகினி உடைகள் அணிந்து நடிப்பதில் உடன்பாடு இல்லை. அது முற்றிலும் தனிப்பட்ட விஷயம் என்று நான் நம்புகிறேன். அந்த மாதிரியான தோற்றத்தில் திரையில் தோன்றுவதில் எனக்கு துளியும் விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் படங்களில் அளவுக்கு அதிகமான நெருக்கமான காட்சிகளிலும் நடிப்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. அதுதான் நான் எனக்கான எல்லையை வகுத்துக் கொண்ட இடம்.
அந்த எல்லையை மீறும் காட்சிகள் இருந்தால் அந்த படத்தில் என்னால் நடிக்க முடியாது என்று நேரடியாக சொல்லி விடுவேன். அது எவ்வளவு பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும் எவ்வளவு முக்கியமான கதாபாத்திரமாக இருந்தாலும் அது பற்றி எனக்கு கவலை இல்லை. ஒரு நடிகராக நமக்கு என்று ஒரு எல்லையை நாம்தான் நிர்ணயிக்க வேண்டும்.
அந்த கொள்கையில் நான் எப்போதும் உறுதியாக இருக்கிறேன் என்று நடிகை காஜல் அகர்வால் கூறியிருக்கிறார். சமீபத்தில் பிகினி உடையணிந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வைரலாக்கிய நடிகை மாளவிகா மோகனன், பிகினி உடை அணிவதில் தவறில்லை என்று கூறியிருந்தார். அவருக்கு தக்க பதிலடி தரும் விதமாக நடிகை காஜல் அகர்வால் பேசியிருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.





