திரைப்படங்களில் எப்படி நடிகர் நடிகைகளுக்கு வரவேற்பும் ஆதரவும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறதோ அதே அளவுக்கு பெண்கள் மத்தியில் டிவி சீரியல்களுக்கு பெரிய வரவேற்பும் ஆதரவும் தொடர்ந்து கிடைத்து வருகிறது. அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற தொடர்களை காட்டிலும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மத்தியில் முன்னணி இடத்தை பிடித்து வருகிறது. வாரத்தின் 7 நாட்களும் இரவு 10 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் அதிக அளவில் இந்த சீரியலை ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.
எதிர்நீச்சல் 2 தொடரில் நடிகைகள் பார்வதி பிரியதர்ஷினி ஹரிப்பிரியா இசை உள்ளிட்டோர் முதன்மை கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். எதிர்நீச்சல் 1 மற்றும் 2 தொடரில் ஈஸ்வரி என்ற கேரக்டரில் முதன்மை கேரக்டரில் நடித்து வந்தவர் நடிகை கனிகா. இப்போது எதிர்நீச்சல் 2 சீரியலில் இருந்து தற்போது திடீரென விலகி உள்ளார்.
எதிர்நீச்சல் முதல் பாகத்தில் இருந்தே நடித்து வந்த கனிகா தற்போது 2வது சீரியலில் விலகியதால் ஈஸ்வரி தொடர்பான காட்சிகள் கடந்த சில வாரங்களாக தொடரில் இடம்பெறவில்லை. இந்நிலையில் எதிர்நீச்சல் 2 சீரியலில் கனிகாவுக்கு பதிலாக நடிகை ஸ்ரீஜா நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
பொம்மலாட்டம் தொடரில் நடித்து ரசிகர்களின் கவனம் பெற்றவர் நடிகை ஸ்ரீஜா. இது மட்டுமின்றி கல்யாணப்பரிசு வீடு போன்ற சில சீரியல்களிலும் ஸ்ரீஜா நடித்திருக்கிறார். நடிகர் வேல ராமமூர்த்தி ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வரும் எதிர்நீச்ச்ல் 2ல் அவரது மனைவியாக ஈஸ்வரி என்ற கேரக்டரில் இனி ஸ்ரீஜா நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் கனிகா நடித்த ஈஸ்வரி கேரக்டரில் நடிகை தேவயானி நடிக்க பலரும் பரிந்துரை செய்து வருகின்றனர்.
ஏற்கனவே இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் கோலங்கள் தொடரில் நடிகை தேவயானி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் எதிர்நீச்சல் 2 சீரியலில் நடிகை தேவயானி நடிப்பாரா அல்லது ஸ்ரீஜா நடிப்பாரா என்கிற முடிவு இயக்குனர் திருச்செல்வம் கையில் உள்ளது. ஆனால் கனிகா நடித்த ஈஸ்வரி கேரக்டரில் ஸ்ரீஜா நடிக்கவே அதிக வாய்ப்பு என்ற தகவலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.





