- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழக அரசியல் கட்சி தலைவரின் 2வது திருமணம், அம்பலத்துக்கு வந்த உண்மை - கிண்டல் செய்த...

தமிழக அரசியல் கட்சி தலைவரின் 2வது திருமணம், அம்பலத்துக்கு வந்த உண்மை – கிண்டல் செய்த நடிகை கஸ்தூரி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை கஸ்தூரி. அபிராமி ஆத்தா உன் கோவிலிலே ராக்காயி கோயில் இந்தியன் உரிமை ஊஞ்சலாடுகிறது அமைதிப்படை சின்னவர் உடன்பிறப்பு உள்ளிட்ட பல படங்களில் நடிகை கஸ்தூரி நடித்திருக்கிறார்.
சமீபத்தில் அவர் பாஜக கட்சியில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசியல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சி முக்கிய கட்சியாக உள்ளது. இதன் நிறுவனர் மருத்துவர் ராமாதாஸ், கட்சியினர் நிறுவனராக உள்ளார். அவரது மகன் அன்புமணி ராமதாஸ் கட்சியின் மாநில தலைவராக உள்ளார். சமீபத்தில் தந்தை மகன் இடையே உட்கட்சி பூசல் ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸூக்கு முதல் மனைவி உள்ள நிலையில் 2வது மனைவியாக சுசிலா என்பவர் இருப்பதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது. அவர் மருத்துவராக பணிசெய்த காலத்தில் அவரிடம் நர்ஸ் ஆக பணிசெய்த சுசிலாவை ராமதாஸ் திருமணம் செய்துக்கொண்டதாகவும் இப்போது சமீபத்தில் 50வது ஆண்டு திருமண நாளை ஒரு நட்சத்திர ஓட்டலில் ராமதாஸ் சுசிலா கொண்டாடியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பாமக நிறுவனர் ராமதாஸ், சமீபத்தில்தான் தனது முதல் மனைவியுடன் 60வது ஆண்டு திருமண நாளை கொண்டாடினார். இப்போது 2வது மனைவியுடன் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் 50வது ஆண்டு திருமண நாளை கொண்டாடியிருக்கிறார் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

நாடக காதல் என்ற மற்றவர்களது காதலை பாமக இதுவரை விமர்சித்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸூம் 50 ஆண்டுகளுக்கு முன்பே காதல் திருமணம் செய்திருக்கிறாரே என்ற கடும் சர்ச்சை எழுந்துள்ளது. ஏற்கனவே அப்பா ராமதாஸ் ஐயாவுக்கும் மகன் அன்புமணிக்கும் கட்சியில் கருத்து வேறுபாடு நீடித்து வரும் நிலையில், இப்போது இந்த பிரச்னையும் விவகாரமாக மாறி கட்சியில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு செய்திருக்கிறார். அந்த பதிவில் நடிகை கஸ்தூரி கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டுல அரசியல் அடிப்படை தகுதியே ரெண்டு கொண்டாட்டி மெயின்டெயின் பண்றதுதான் போல. அட போங்கய்யா… இங்கே எத்தனை பிள்ளைகளோ, கட்சியை யார் யாரு எத்தனை கூறு போடப் போறாங்களோ என்று கிண்டலாக கூறியிருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்