- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் தனுஷின் மகனுக்கு போலீசார் அபராதம்... எத்தனை ரூபாய் அபராதம்?... எதற்காக என்று தெரியுமா...

நடிகர் தனுஷின் மகனுக்கு போலீசார் அபராதம்… எத்தனை ரூபாய் அபராதம்?… எதற்காக என்று தெரியுமா…

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவர் தனுஷ். துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி காதல் கொண்டேன், திருடா திருடி, பொல்லாதவன், யாரடி நீ மோகினி, ஆடுகளம், வேலையில்லா பட்டதாரி, வடசென்னை, அசுரன், திருச்சிற்றம்பலம் என ஏராளமான வெற்றி திரைப்படங்களை அவர் கொடுத்துள்ளார்.

இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகனான அவர், தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன, நானே வருவேன் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் ஒவ்வொரு திரைப்படமும் தனுஷின் நடிப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் அளவுக்கு இருந்தது.

- Advertisement -

குறிப்பாக காதல் கொண்டேன் மற்றும் புதுப்பேட்டை ஆகிய திரைப்படங்களில் தனுஷ் வெளிப்படுத்திய நடிப்பிற்காக நிச்சயம் அவருக்கு தேசிய விருதை கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் இன்றளவும் கூறி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, வெற்றிமாறனின் ஆடுகளம் மற்றும் அசுரன் திரைப்படத்திற்காக தேசிய விருதை தட்டிச் சென்றார் தனுஷ்.

தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்திருக்கும் அவர், தனது ஐம்பதாவது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படத்தில் அவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். தனுஷ் திருடா திருடி திரைப்படம் வெளியான சமயத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்தார்.

- Advertisement -

பெற்றோர் சம்மதத்துடன் அவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. சூப்பர் ஸ்டாரின் மருமகன் என்று அந்தஸ்து உயர்ந்தாலும், நடிப்பில் தனி கவனம் செலுத்தி அதன் மூலம் பெயரை சம்பாதித்து வந்தார் தனுஷ். தனுஷ் ஐஸ்வர்யா தம்பதிக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தம்பதியர் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் கடந்த வருடம் இருவரும் பிரிந்தனர்.

இந்த நிலையில் தனுஷின் மூத்த மகன் யாத்ராவுக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர். 17 வயதான தனுஷின் மகன், போக்குவரத்து விதிகளை மதிக்காமல் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் ஓட்டியுள்ளார். இதன் காரணமாக அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தனுஷின் வீட்டிற்கே சென்ற போக்குவரத்து போலீசார், யாத்ராவிற்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

- Advertisement -

சற்று முன்