- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழக அரசு விருது பெறும் தமிழ் சினிமா கலைஞர்கள் - 2016 முதல் 2022ம் ஆண்டு...

தமிழக அரசு விருது பெறும் தமிழ் சினிமா கலைஞர்கள் – 2016 முதல் 2022ம் ஆண்டு வரை 7 ஆண்டுகளுக்கான விருதுகள் அறிவிப்பு!

- Advertisement -

தமிழக அரசு 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை 7 ஆண்டுகள் வரை தமிழ் சினிமாவில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகர் நடிகைகள் விருது பட்டியலை அறிவித்துள்ளது. வரும் பிப்ரவரி 13ம் தேதி சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று விருதுகளை வழங்க உள்ளார்.

சிறந்த படம் முதல் பரிசு 2 லட்சம் ரூபாய், 2ம் பரிசு ஒரு லட்சம் ரூபாய் 3ம் பரிசு 75,000 ரூபாய் சிறப்பு பரிசு 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. பெண்களை உயர்வாக சித்தரிக்கும் படத்திற்கு சிறப்பு பரிசாக 1.25 லட்சம் ரொக்கம் வழங்கப்படுகிறது. சிறந்த நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஒரு சவரன் பதக்கம் இந்த விழாவில் வழங்கப்பட உள்ளது. தமிழக அரசு சார்பில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

2016ம் ஆண்டு – சிறந்த படம் மாநகரம் சிறந்த நடிகர் – விஜய் சேதுபதி (புரியாத புதிர்) சிறந்த இயக்குனர் – லோகேஷ் கனகராஜ் சிறந்த வில்லன் நடிகர் – ரகுமான் (ஒரு முகத்திரை) சிறந்த நடிகர் – (சிறப்பு பரிசு) குரு சோமசுந்தரம் (ஜோக்கர்) சிறந்த நடிகை – (சிறப்பு பரிசு) அதிதீபாலன் (அருவி) சிறந்த காமெடி நடிகர் – ரோபோ சங்கர் (வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்) சிறந்த காமெடி நடிகை – மதுமிதா (காஷ்மோரா) சிறந்த குணச்சித்திர நடிகர் – பார்த்திபன் (மாவீரன் கிட்டு) சிறந்த குணசித்திர நடிகை – மனிஷா யாதவ் (ஒரு குப்பை கதை) சிறந்த இசையமைப்பாளர் – சாம் சிஎஸ் (புரியாத புதிர்)

2017ம் ஆண்டு – சிறந்த படம் அறம் சிறந்த படம் (சிறப்பு பரிசு) டூலெட் 2017 பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் பிரிவில் சிறப்பு விருது – தர்மதுரை சிறந்த நடிகர் – கார்த்தி (தீரன் அதிகாரம் 1) சிறந்த நடிகை – நயன்தாரா (அறம்) சிறந்த குணச்சித்திர நடிகர் – போஸ் வெங்கட் (கவன் தீரன் அதிகாரம் 1) சிறந்த நடிகர் – (சிறப்பு பரிசு) சந்தோஷ் ஸ்ரீராம் (டூலெட்) சிறந்த நடிகை – (சிறப்பு பரிசு) ஆண்ட்ரியா ஜெர்மையா ( தரமணி) சிறந்த வில்லன் நடிகர் – பிரசன்னா (திருட்டுப்பயலே 2) சிறந்த காமெடி நடிகர் பாலசரவணன் (என் ஆளோட செருப்ப காணோம்) சிறந்த காமெடி நடிகை – ஊர்வசி (மகளிர் மட்டும்) சிறந்த குணச்சித்திர நடிகை – சுனு லஷ்மி (அறம்).

- Advertisement -

2018ம் ஆண்டு சிறந்த படம் – பரியேறும் பெருமாள் சிறந்த நடிகர் – தனுஷ் (வடசென்னை) சிறந்த நடிகை – ஜோதிகா (செக்கச் சிவந்த வானம்) சிறந்த நடிகர் – (சிறப்பு பரிசு) விஷ்ணு விஷால் (ராட்சசன்) சிறந்த நடிகை – (சிறப்பு பரிசு) ஐஸ்வர்யா ராஜேஷ் (கனா வடசென்னை) சிறந்த வில்லன் நடிகர் – சமுத்திரக்கனி (வடசென்னை) சிறந்த இயக்குனர் – மாரி செல்வராஜ் (பரியேறும் பெருமாள்)

சிறந்த காமெடி நடிகர் – யோகி பாபு (மோகினி) சிறந்த காமெடி நடிகை – தேவதர்ஷினி (96) சிறந்த இசையமைப்பாளர் – சந்தோஷ் நாராயணன் சிறந்த வசன உரையாடல் – அருண் ராஜா காமராஜ் (கனா) சிறந்த பாடலாசிரியர் தியாகராஜன் குமார ராஜா (சீதக்காதி) என தமிழக அரசு விருதுகளை அறிவித்துள்ளது. இதே போல் 2019ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை சிறந்த கலைஞர்கள் சிறந்த திரைப்படங்கள் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்