- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் பாக்யராஜை காதலித்து துரோகம் செய்தவர் வேறு யாருமல்ல, நடிகர் ரவி மோகனின் மாமியார்...

நடிகர் பாக்யராஜை காதலித்து துரோகம் செய்தவர் வேறு யாருமல்ல, நடிகர் ரவி மோகனின் மாமியார் தான் – நடிகை கஸ்தூரி போட்டாரே ஒரு போடு!

- Advertisement -

இயக்குனர் கே பாக்யராஜ் மறைந்து ஒரு வாரம் கடந்து விட்டது. எனினும் அவரது மறைவின் வலி இன்னும் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் சினிமா துறை சார்ந்த நடிகர் நடிகைகளிடமும் குறையவில்லை. குருநாதர் பாரதிராஜா மறைந்த 17வது நாளில் அவரது சீடர் கே பாக்யராஜூம் மறைந்தது மிகப்பெரிய சோகமாக மனதை கலங்க வைத்துள்ளது.

இயக்குனர் நடிகர் திரைக்கதை ஆசிரியர் இசையமைப்பாளர் பாடகர் என பன்முக திறமை கொண்ட ஒரு அசாத்திய ஆளுமை மிக்கவர் கே பாக்யராஜ். அவரது படங்கள் எல்லாமே யதார்த்தமான கதைக்களத்தில் உருவான கதை அம்சம் கொண்ட படங்களாக இருந்தன. இதுவரை அவர் படங்கள் எல்லாமே ஏதாவது ஒரு நல்ல கருத்தை அடிப்படையாக வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசிய நடிகை கஸ்தூரி கூறியதாவது, கடந்த ஒரு வாரமாக பாக்யராஜ் படமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்தி நடிகை மாதுரி தீக்சித்தை சூப்பர் ஸ்டார் ஆக்கிய படமே பாக்யராஜின் எங்க சின்ன ராசா படத்தில் இந்தி ரீமேக் தான். ராசுக்குட்டி படத்தையும் இந்தியில் ரீமேக் செய்தார்கள்.

நாங்கள் இந்தி குரூப்போடு படம் பார்த்த செல்லும் போது பாக்யராஜின் பெயர் வரும்போது நாங்கள் கைதட்டுவோம். அப்போதே ஏஐ தொழில்நுட்பம் எதுவும் இல்லாமல் அவசர போலீஸ் 100 திரைப்படத்தை பாக்யராஜ் எடுத்தார். நான் பாக்யராஜின் தீவிரமான ரசிகை. என் மகளுக்கு நான் பாக்யராஜூடைய படங்களை தான் காண்பித்தேன்.சமீபத்தில்கூட அவருடைய விடியும் வரை காத்திரு திரைப்படத்தை பார்த்தேன்.

- Advertisement -

அதில் ஒரு முக்கியமான ஆள் நடித்திருக்கிறார். அந்த படத்தில் பாக்யராஜின் காதலி. பாக்யராஜூக்கே துரோகம் செய்பவர் யார் தெரியுமா? நடிகர் ரவிமோகனின் மாமியார், ஆர்த்தி ரவியின் அம்மா சுஜாதா விஜயகுமார் தான். இத்தனை நாட்கள் இதை தெரிந்து கொள்ளாமல் இருந்தோமே என்று தோன்றுகிறதா? இதை ஏன் சொல்கிறேன் என்றால், தெரியாதவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று அதற்குதான் சொல்கிறேன். நீங்களே அதை புரிந்து கொள்ளுங்கள்.

அதேபோல் பாக்யராஜ் நடத்திய பாக்யா இதழ் தான் ஜனரஞ்சகமான வார இதழ். அதில் அவசர போலீஸ் 100 உள்ளிட்ட கதைகள் எல்லாம் தொடராக வந்தன. அதேபோல் பாக்யராஜூம் பூர்ணிமாவும் எங்கே போனாலும் அவ்வளவு ஒற்றுமையாக போவார்கள். அப்படிப்பட்ட பூர்ணிமாவை அன்று அழுது பார்க்க முடியவில்லை. எல்லோரது வீட்டிலும் இழப்பு இருக்கிறது. ஆனால் சிலருக்குஇறப்பு இல்லை என்று நடிகை கஸ்தூரி கூறயிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்