- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் சொல்வது போல் நடந்தால், அவரது வாயில் சர்க்கரை போடுவேன், உதயநிதிக்கு இது ஒன்றும் புதிதல்ல...

விஜய் சொல்வது போல் நடந்தால், அவரது வாயில் சர்க்கரை போடுவேன், உதயநிதிக்கு இது ஒன்றும் புதிதல்ல – ஆவேசமாக கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரி!

- Advertisement -

தமிழில் இந்தியன் அமைதிப்படை ராக்காயி கோயில் ஆத்தா உன் வாசலிலே உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கஸ்தூரி. இப்போது சினிமா வாய்ப்புகள் வெகுவாக குறைந்து விட்டதால், பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்று வருகிறார். அடிக்கடி இணையத்தில் தனது சமூக கருத்துகளை அரசியல், சினிமா, நாட்டு நடப்பு விஷயங்கள் சார்ந்து பேசுகிறார்.

சமீபகாலமாக நடிகை கஸ்தூரி சர்ச்சையான விஷயங்களை பேசி விமர்சனங்களில் சிக்கி வருகிறார். சில வாரங்களுக்கு முன் சென்னையில் நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து விமர்சித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது போலீஸ் வழக்காகி, நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் விஜய் குறித்து பேசி நடிகை கஸ்தூரி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரி கூறியதாவது, வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுகவின் கூட்டணி கணக்கு மைனஸ் ஆகிவிடும் என்று விஜய் பேசி இருப்பது மட்டும் உண்மையானால், அப்படி நடந்துவிட்டால், அவரது வாயில் நான் சர்க்கரை போடுவேன்.

திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன் அங்கிருந்து வெளியே வருவாரா என்பது தெரியவில்லை. ஆனால் திருமாவளவன், அவரது கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் இருவரும் இனிமேல் விடுதலை சிறுத்தை கட்சியில் தொடர்ந்து பயணிப்பார்களா என்பதும் சந்தேகம்தான்.

- Advertisement -

உதயநிதி ஸ்டாலின் விஜய் சொன்ன கருத்துக்களை சினிமா செய்தியாக நான் பார்க்கிறேன் என்று கூறுகிறார். அவரது ரெட் ஜெயின்ட் நிறுவனத்தை பற்றி தான் சொல்கிறார் என்று நான் நினைக்கிறேன். உதயநிதி மற்றவர்களை தரக்குறைவாக பேசுவது என்பது புதிய விஷயம் அல்ல. அவர் இன்றைக்கு விஜய்யும் ஆதவ் அர்ஜூனாவையும் சொல்லி இருக்கிறார்.

இதற்கு முன்பு இந்து சனாதனத்தை பற்றி அப்படி உதயநிதி பேசினார். அதற்கு முன்பு ரஜினியை சொன்னார். இதுபோன்று அவர் அடிக்கடி மற்றவர்களை தரக் குறைவாக பேசுகிறார். இதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை என்று நடிகை கஸ்தூரி செய்தியாளர்களிடம் வெளிப்படையாக பேசியிருக்கிறார். சமீபத்தில்தான் கஸ்தூரி கைதாகி, வெளியே வந்தார். மீண்டும் ஆளுங்கட்சி திமுகவை விமர்சிக்கிறாரே என ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்