விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான “பீஸ்ட்” திரைப்படம் வணிக ரீதியாக நல்ல கலெக்சனை பார்த்திருந்தாலும் ரசிகர்களை அத்திரைப்படம் ஈர்க்கவில்லை. குறிப்பாக இத்திரைப்படத்தின் கிளைமேக்ஸில் விஜய் விமானத்தில் பறக்கும் காட்சியை பலரும் கேலிக்குள்ளாக்கினார்கள். அது மட்டுமல்லாது இயக்குனர் நெல்சனை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளிவிட்டனர். இதனால் விஜய் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினார்கள்.

“பீஸ்ட்” திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்றுகொண்டிருந்த போதே ரஜினியிடம் நெல்சன் “ஜெயிலர்” படத்தின் கதையை கூறி ஓகே வாங்கிவிட்டார். ஆனால் “பீஸ்ட்” திரைப்படத்திற்கு கிடைத்த கவலைக்கிடமான வரவேற்பை பார்த்து ரஜினி ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சியடைந்தார்கள்.
ரஜினிக்கு நெருக்கமானவர்கள் பலரும் “பீஸ்ட்” திரைப்படத்திற்கு கிடைத்த நெகட்டிவ் ரெஸ்பான்ஸை பார்த்து ரஜினியிடம் “ஜெயிலர் படத்தில் நடிக்க வேண்டாம்” என்று கூறினார்களாம். ஆனால் ரஜினிகாந்த் நெல்சனின் மீதுள்ள நம்பிக்கையில் “ஜெயிலர்” படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இதனை ரஜினிகாந்தே “ஜெயிலர்” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூறினார்.

இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான அந்தணன், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது நிருபர், “பீஸ்ட் படத்தில் ஹீரோவிற்கு கொடுக்கப்பட்ட மாஸ் காட்சிகள் வில்லனுக்கு கொடுக்கப்படவே இல்லை. இந்த பிரச்சனை ஜெயிலர் படத்திலும் இருக்குமா? அல்லது நெல்சன் அதனை சரி செய்திருப்பாரா?” என்று ஒரு கேள்வியை கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த பத்திரிக்கையாளர் அந்தணன், “நிச்சயமாக ஜெயிலரில் அதனை சரி செய்திருப்பார் நெல்சன். ஒரு சக்திவாய்ந்த ஹீரோ, அதை விட சக்திவாய்ந்த வில்லனை வீழ்த்தும்போதுதான் ரசிகர்கள் கைத்தட்டுவார்கள். எப்போதுமே வில்லன் ஒரு சக்திவாய்ந்த வில்லனாக இருக்க வேண்டும். இது அடிப்படையான ஃபார்முலா. அதனை பீஸ்ட் படத்தில் நெல்சன் தவறவிட்டுவிட்டார்” என்று கூறியிருக்கிறார்.





