- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடப்பாவி…. என்னடா இப்படி சொல்லிட்டே? போடா… காரில் ஏறிய போது திடீரென கடுப்பான நடிகை கீர்த்தி...

அடப்பாவி…. என்னடா இப்படி சொல்லிட்டே? போடா… காரில் ஏறிய போது திடீரென கடுப்பான நடிகை கீர்த்தி சுரேஷ் – இணையத்தில் வைரலான வீடியோ!

- Advertisement -

மலையாள சினிமாவில் இருந்து தமிழ் படங்களில் நடிக்க வந்தவர் கீர்த்தி சுரேஷ். பைரவா சர்கார் ரெமோ ரஜினி முருகன் அண்ணாத்த சைரன் 108 சாமி 2 நடிகையர் திலகம் தொடரி என பல படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றார். ஓராண்டுக்கு முன்பு ஆண்டனி தட்டில் என்ற தனது நீண்ட கால நண்பரை அவர் திருமணம் செய்துக்கொண்டார்.

இதில் மகாநடி என்ற படம்தான் தமிழில் நடிகையர் திலகம் என்று வெளியானது. இந்த படத்தில் மறைந்த நடிகை சாவித்திரி தேவி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் மிகவும் சிறப்பான அழுத்தமான நடிப்பை தந்திருந்தார். இந்த படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகை தேசிய விருது கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

திருமணத்துக்கு பிறகும் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தமிழக அரசு சார்பில் நடந்த திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்துக்கொண்டார். இதில் பாம்பு சட்டை என்ற படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த விருது விழாவில் கலந்து கொள்வதற்காக பாரம்பரியமான பட்டுப்புடவை அணிந்து தலையில் மல்லிகைப்பூ வைத்த நிலையில் சென்னையில் தங்கியிருந்த ஒரு பங்களா அறையை விட்டு அவர் வெளியே வந்தார். அங்கு நின்றிருந்த காரில் கீர்த்தி சுரேஷ் ஏற முற்பட்டார்.

- Advertisement -

அப்போது அங்கு அருகில் நின்று இருந்த ரசிகர் ஒருவர், கீர்த்தி சுரேஷ் என்க அவரை கீர்த்தி சுரேஷ் திரும்பி பார்த்தார். பூ சூப்பரா இருக்குது என்று அவர் சொல்ல தேங்க்யூ என்று கீர்த்தி சொன்னார். பிறகு என்ன பூ சூப்பரா இருக்குதா என்று ஆச்சரியமாக திருப்பி கேட்டார். சட்டென கீர்த்தி சுரேஷ் முகத்தில் சற்று அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.

அடப்பாவி இவ்வளவு ரெடியாகி வந்திருக்கேன். லுக்கு சூப்பரா இருக்குதுன்னு சொல்வான்னு பார்த்தா பூ நல்லா இருக்குதுன்னு சொல்றானேன்னு என்று வாய்விட்டு புலம்பிய அவர் போடா என்று ரசிகரை சற்று விரக்தியாக சொல்லிவிட்டு காரில் ஏறிச் சென்றார். இப்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்