- Advertisement -
Homeபொழுதுபோக்குலப்பர் பந்து நாயகன் ஹரீஷ் கல்யாண் நடிக்கும் புதிய படம்; முக்கிய கேரக்டரில் நடிக்கும் பாலிவுட்...

லப்பர் பந்து நாயகன் ஹரீஷ் கல்யாண் நடிக்கும் புதிய படம்; முக்கிய கேரக்டரில் நடிக்கும் பாலிவுட் நடிகர் – இன்னொரு தரமான சம்பவமும் இருக்குது!

- Advertisement -

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றவர் ஹரீஷ் கல்யாண். அப்போது பொறியாளன் என்ற ஒரு படத்தில் மட்டுமே நடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் நடித்த பியார் பிரேமம் காதல் என்ற படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தொடர்ந்து சில படங்களில் நடித்தும் அதிக கவனத்தை ரசிகர்களிடம் பெற முடியவில்லை.

இந்நிலையில் ஹரீஷ் கல்யாண் நடித்த பார்க்கிங் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. வீட்டு காம்பவுண்டுக்குள் காரை நிறுத்துவதில் ஹரீஷ் கல்யாணுக்கும், எம் எஸ் பாஸ்கருக்கும் ஏற்படும் மோதல்தான் படத்தின் மையக்கரு. இந்த படத்தில் இருவருமே நடிப்பில் வெளுத்து வாங்கினர். படம் வேற லெவலில் வெற்றியை பெற்றது.

- Advertisement -

அதன்பிறகு சமீபத்தில் வெளியான லப்பர் பந்து படமும் நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு மிகப்பெரிய வெற்றியை தந்த படமாக அமைந்தது. அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய இந்த படத்தில் கெத்து கேர்கடரில் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பு பெரிய லெவலில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டில் வெளியான படங்களில் லப்பர் பந்து, ரசிகர்கள் கொண்டாடிய முக்கியமான படமாக அமைந்தது.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாணிடம் பேசிய தயாரிப்பாளர் ஒருவர், நல்ல கதை ஒன்று உள்ளது. அதில் இன்னொரு நாயகனும் நடிக்கிறார். அந்த படத்தில் நடிக்க சம்மதமா என கேட்டிருக்கிறார். அதற்கு, இன்னொரு ஹீரோ என்னுடன் நடிப்பதில் எந்த ஆட்சேபமும் எனக்கு இல்லை. கதை நன்றாக இருந்தால் போதும், கண்டிப்பாக நடிக்கிறேன், என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

வழக்கமாக ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டாலே, தனி நாயகனாக தான் நடிப்பேன் என்றும், சம்பளத்தை உடனே 4 மடங்காக உயர்த்தி விடும் இன்றைய தமிழ் ஹீரோக்களுக்கு மத்தியில் ஹரீஷ் கல்யாணின் இந்த பக்குவப்பட்ட பார்வையும், பண்பும் ரசிகர்கள் மத்தியில் பெரிய பாராட்டை, வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது லிப்ட் பட இயக்குனர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ஹரீஷ் கல்யாண் நடித்து வருகிறார். இதில் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இவர் இதற்கு முன் ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் கேமியோ ரோலில் நடித்திருந்தார். மேலும், சென்னையில் நடைபெறும் திரைப்பட விழாவில் ஹரீஷ் கல்யாண் நடித்த பார்க்கிங், லப்பர் பந்து என 2 படங்கள் திரையிடப்படுகிறது. ஒரு நடிகரின் 2 படங்கள் சென்னை திரைப்பட விழாவில் திரையிடப்படுவது ஸ்பெஷல் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்