- Advertisement -
Homeபொழுதுபோக்குபாஜக மாநில துணைத் தலைவர் நடிகை குஷ்பு… வருகிற 2026ல் சட்டசபை தேர்தலில் போட்டியா? -...

பாஜக மாநில துணைத் தலைவர் நடிகை குஷ்பு… வருகிற 2026ல் சட்டசபை தேர்தலில் போட்டியா? – அவரே சொன்ன பதில்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். தமிழில் மட்டுமின்றி இந்தி தெலுங்கு மலையாளம் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இயக்குனர் சுந்தர் சியை காதல் திருமணம் செய்த நிலையில் இந்த நட்சத்திர தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் அரசியல் ஆர்வம் காரணமாக ஆரம்பத்தில் திமுகவில் இணைந்த குஷ்பு பிறகு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இரண்டு கட்சிகளிலும் இணைந்த அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பும் ஆதரவும் கிடைக்காத நிலையில் கடந்த 2020ம் ஆண்டில் பாஜகவில் இணைந்தார். அங்கு தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக இருந்த அவர் இப்போது பாஜக மாநில துணை தலைவராக நேற்று அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

இதுகுறித்து நடிகை குஷ்பு கூறியதாவது, என்னை மாநில துணை தலைவராக நியமனம் செய்த நரேந்திர மோடி நட்டா மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. இதை நான் எதிர்பார்க்கலே. தேர்தல் நேரத்தில் இதுபோன்ற பதவிகளை கொடுத்து கட்சி பணிகளை எப்படி செய்ய வேண்டும், மக்களுக்கான திட்டங்கள் வளர்ச்சி பணிகள் குறித்து கட்சி என்ன செய்கிறது என்பதை மக்களிடம் கொண்டு செல்வதுதான் எங்களது வேலை.

பூத் அளவில் எப்படி கட்சியை வலிமை செய்வது, மக்களிடம் நம்பிக்கையை பெறுவது அதுதான் முக்கியம். அதற்கான நேரம் இருக்கிறது. அந்த பணிகளை நாங்கள் செய்வோம். இந்த முறை தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்று சத்தியமா எனக்கு தெரியலே, பாஜகவை பொருத்த வரை யாருக்கு எந்த நேரத்தில் என்ன பொறுப்பு வரும் என்று யாராலேயும் சொல்ல முடியாது.

- Advertisement -

கடந்த 2021ம் ஆண்டில் ஆயிரம் விளக்கு தொகுதியில் எனக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்தாங்க. அதுக்கு முன்னால சேப்பாக்கம் – திருவல்லிக்கேணியில் பொறுப்பாளராக போட்டிருந்தாங்க. அப்போது கொரோனா தொற்று பீக்குல வேலை பார்த்துட்டு இருந்தேன். அப்போது ஆயிரம் விளக்கு தொகுதியில் நீங்க போட்டியிடுங்கன்னு சொன்னாங்க.

இப்போ வந்து திடீருன்னு மாநில துணைத் தலைவர் போஸ்டிங் கொடுத்திருக்காங்க. வேலை செஞ்சுட்டே இருப்போம். எப்போ எங்கிருந்து என்ன பொறுப்பு வரும் என்று தெரியாது. அதனால் அடுத்த வருஷம் 2026ல் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருக்கா இல்லையான்னு எனக்கு தெரியாது. அது முக்கியம் கிடையாது. அதை விட எங்களுக்கு முக்கியம் காரியகர்த்தா. பாஜகவோட காரியகர்த்தாவாக நாங்க நல்ல முறையில் செயல்படுவது பணிசெய்வதே முக்கியம் என்று நடிகை குஷ்பு கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்