- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் - சங்கீதா குடும்ப விவகாரத்தில் அவர்களுக்கு என்ன பிரச்னை…? - ஆவேசமாக கேள்வி எழுப்பிய...

விஜய் – சங்கீதா குடும்ப விவகாரத்தில் அவர்களுக்கு என்ன பிரச்னை…? – ஆவேசமாக கேள்வி எழுப்பிய நடிகை குஷ்பூ!

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக இருப்பவர் நடிகர் விஜய். அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் ஆதரவும் இருந்து வரும் நிலையில், அவரது குடும்ப விவகாரம் இப்போது பெரிய பிரச்னையாக மாறியிருக்கிறது. இதுகுறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

குறிப்பாக நடிகர் விஜய் மீது அவர் மனைவி சங்கீதா பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். வருகிற ஏப்ரல் 20ம் தேதி இந்த வழக்கில் விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி சுஜாதா உத்தரவிட்டுள்ளார்.

- Advertisement -

மேலும் தனது கணவருக்கும் தனக்கும் பிரச்னை ஏற்படவே ஒரு நடிகை தான் காரணம் என்றும் திருமணத்தை மீறிய உறவை அவருடன் விஜய் வைத்திருப்பதாகவும் சங்கீதா அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த சூழலில் நடிகர் விஜய், ஒரு திருமண விழாவில் நடிகை திரிஷாவுடன் ஜோடியாக வந்து மணமக்களை வாழ்த்தியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே விஜய் சங்கீதா மற்றும் திரிஷா விவகாரம் குறித்து பலரும் பலவிதமான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். ஒரு சிலர் இது அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை என்றும் ஒரு தரப்பினர், அரசியல் தலைவராக உள்ள விஜய் தனிமனித ஒழுக்கத்தில் சிறந்தவராக இருக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் விஜய் சங்கீதா விவகாரம் குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய பாஜக கட்சியின் மாநில துணைத்தலைவர் மற்றும் நடிகை குஷ்பூ கூறியதாவது, இந்த விவகாரத்தில் மக்களுக்கு என்ன சம்பந்தம் என்று எனது புரியவில்லை. இது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மக்களை பாதிக்கிறது என்றால் அதைப் பற்றி பேசலாம்.

இல்லையெனில் ஏன் இதைப் பற்றி இவ்வளவு பெரிய விஷயமாக மாற்ற வேண்டும். அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை பார்த்துக் கொள்வார்கள். இதனால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று நடிகை குஷ்பூ விஜய்க்கு ஆதரவான கருத்துகளை கூறியிருக்கிறார். பாஜக வை கொள்கை எதிரி என்று விஜய் விமர்சித்து வரும் நிலையில் பாஜக சார்ந்த அண்ணாமலை குஷ்பூ போன்றவர்கள் விஜய்க்கு ஆதரவாக பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்