தமிழ் சினிமாவில் அழகான நடிகைகள் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். அதுவும் உலக அழகியாக தேர்வான ஒருவர் தமிழ் சினிமாவில் நடித்தால், என இயக்குநர் ஷங்கர் யோசித்ததால் நடிகையாக ஐஸ்வர்யா ராய் ஜீன்ஸ் படத்தில் நடித்தார்.
தொடர்ந்து மணிரத்னம் படங்களில் ஆஸ்தான நாயகியாக ஐஸ்வர்யா ராய் இருந்து வருகிறார். இருவர், ராவணன், குரு, பொன்னியின் செல்வம் 1 பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்களில் மணிரத்னம் படங்களில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார்.
இதுதவிர மணிரத்னத்திடம் ஒளிப்பதிவாளராக பணிசெய்த ராஜிவ் மேனன் இயக்கிய கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். ரஜினிகாந்துடன் எந்திரன் படத்திலும் நடித்திருந்தார். ரஜினியின் தொடர் போராட்டத்கு பிறகுதான் அவருடன் ஐஸ்வர்யா ராய் நடித்த சுவாரசியமான தகவல் உண்டு.
அதாவது பாபா, படையப்பா, சிவாஜி ஆகிய படங்களில் ஐஸ்வர்யா ராயை நடிக்க அழைத்த போது, பணத்துக்கு ஆசைப்படும் கேரக்டராக பாபாவில் நடிக்க மாட்டேன் என்றும், படையப்பா படத்தில் சவுந்தர்யா கேரக்டரில் நடிக்க, தனக்கு கதையில் போதிய ஸ்கோப் இல்லை என்றும், சிவாஜி படத்தில் நடிக்க, இப்போது கால்ஷீட் டைட்டாக உள்ளது என்றும் தட்டிக்கழித்த ஐஸ்வர்யா ராய், கடைசியில் ஷங்கர் விரும்பி கேட்டுக் கொண்டதால் எந்திரன் படத்தில் ரஜினியுடன் நடித்திருக்கிறார்.
ஆனால் உலக அழகியாக தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்த அவர், உலக நாயகன் கமல்ஹாசனுடன் இதுவரை நடிக்கவில்லை. சில படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்தை இயக்குநர்கள் தரப்பில் நடத்தப்பட்டும், கமலுடன் நடிப்பதை தவிர்த்தே வந்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய். ஆனால் இப்போது ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.
மணிரத்னம் இயக்கும் தக்லைப் படத்தில், ஐஸ்வர்யா ராய் கமலுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் கமலுக்கு அவர் ஜோடியாக நடிக்கிறார் என்றும் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் திரிஷா, அபிராமி நடிப்பது உறுதியான நிலையில், மணிரத்னத்தின் ஆஸ்தான நாயகி ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. துவக்கத்தில் நயன்தாராதான் கமலுக்கு ஜோடி என்றனர். ஆனால் அவர் நடிக்கவில்லை என்ற நிலையில், அவரது கேரக்டரில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறாரா, அல்லது உருட்டா என்பது சில தினங்களில் தெரிய வந்துவிடும்.





