- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் ரஜினியுடன் நடிச்சது ரொம்ப பெரிய தப்பு, ஏண்டா நடிச்சோம்னு அப்புறமா பீல் செஞ்சேன் -...

நான் ரஜினியுடன் நடிச்சது ரொம்ப பெரிய தப்பு, ஏண்டா நடிச்சோம்னு அப்புறமா பீல் செஞ்சேன் – அட நடிகை குஷ்புவா இப்படி சொல்றாங்க?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக சூப்பர் ஸ்டராக வலம் வருபவர். ஸ்டைலும், சுறுசுறுப்பும்தான் ரஜினியின் ஸ்பெஷல். 73 வயதிலும் அவர் ஹீரோவாக வலம் வர அதுதான் காரணம். ரஜினி என்றாலே மாஸ்தான் என்று ரசிகர்கள் அவரை கொண்டாடுகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் 25 ஆண்டுகளாக, நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் இருக்கு, ஆண்டவன் சொன்னால், நான் அரசியலுக்கு வந்துவிடுவேன் என்று தன்னை நம்பிய ரசிகர்களை ஏமாற்றியவர்தான் ரஜினி என்ற விமர்சனமும் அவர் மீது இருந்து வருகிறது. எனினும், அவரது படங்களை அது பாதிக்கவில்லை.

தமிழ் சினிமாவில் ரஜினியுடன் நடிக்க ஆசைப்படும் நடிகர், நடிகைகள் இப்போதும் நிறைய பேர் இருக்கின்றனர். அதே போல் பல முன்னணி நடிகர், நடிகைகள் ரஜினியுடன் பல படங்களில் நடித்தும் இருக்கின்றனர். அந்த வகையில் ரஜினியுடன் நடிகை குஷ்பு சில படங்களில் ஜோடியாக நடித்துள்ளார்.
மன்னன், அண்ணாமலை, பாண்டியன், அண்ணாத்த ஆகிய படங்களில் குஷ்பு நடித்திருக்கிறார்.

இதில் மன்னன் படத்தில், ரஜினி குஷ்புவை காதலிக்கும் நிலையில், விஜயசாந்தி ரஜினியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துக்கொள்வார். அதே போல் அண்ணாத்த படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருப்பார். இந்த படத்தில் குஷ்பு பாண்டியராஜனும், மீனா லிவிங்ஸ்டனுக்கும் ஜோடியாக நடித்திருந்தார்கள். ஆனால் குஷ்பு, மீனா இந்த படத்தில் டம்மி கேரக்டர்களில்தான் நடித்திருந்தனர்.

இதுகுறித்து நடிகை குஷ்பு, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு முதலில் ஜோடி என்று யாரும் இல்லை. அதற்கு பிறகுதான் இயக்குனர், ஒரு டாப் ஹீரோயினை கொண்டு வந்தார். ஆரம்பத்தில் இயக்குனர் சொன்ன கதையில், ரஜினிக்கு ஜோடியே இல்லை.

அதனால் கதையை கேட்டு என்னுடைய ரோலுக்கும், மீனா ரோலுக்கும் அதிக முக்கியத்துவம் இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் நடித்தோம். ஆனால் அதற்கு பிறகு எல்லாமே மாறிவிட்டது. ஏண்டா இந்த படத்தில் நடிச்சோம் என்று அப்புறமாக பீல் பண்ணினேன், என்று கூறியிருக்கிறார் நடிகை குஷ்பு. அந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்