- Advertisement -
Homeபொழுதுபோக்குநிறைய பேரை பார்த்து சிரிச்சுட்டு இருக்கேன், அந்த வாழ்க்கையை நான் விரும்பலே - உண்மையை போட்டுடைத்த...

நிறைய பேரை பார்த்து சிரிச்சுட்டு இருக்கேன், அந்த வாழ்க்கையை நான் விரும்பலே – உண்மையை போட்டுடைத்த நடிகை கோவை சரளா!

- Advertisement -

காமெடி நடிப்பில் ஆச்சி மனோரமாவுக்கு பிறகு அதிக கவனம் பெற்றவர் கோவை சரளா தான். தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் தனக்கென ஒரு இடத்தை அடையாளத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருப்பவர் கோவை சரளா. இப்போது அவருக்கு 63 வயதாகிறது. அவர் திருமணம் செய்துக் கொள்ளவே இல்லை. அதுகுறித்த எண்ணமும் அவருக்கு இல்லை என்று வெளிப்படையாக கூறுகிறார்.

தமிழ் சினிமாவில் இப்படி முரட்டு சிங்கிளாக சில நடிகைகள் உள்ளனர். இந்த வரிசையில் கவுசல்யா சித்தாரா பூணம் பஜ்வால் நக்மா திரிஷா பூஜா ஹெக்டே அனுஷ்கா ஷெட்டி என பல நடிகைகள் 40 வயதுகளை கடந்தும் திருமணம் செய்துக்கொள்ள விருப்பமின்றி வாழ்ந்து வருகின்றனர். நடிகை கோவை சரளா தனது சகோதரிகளின் குடும்பங்களை கவனித்துக்கொண்டு திருமண வாழ்க்கையை மறுத்து விட்டார் என்றும் ஒரு தகவல் உள்ளது.

- Advertisement -

இயக்குனர் கே பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு சின்னவீடு படங்களில் படங்களில் நடித்து ரசிகர்களிடம் அறிமுகமான கோவை சரளா அதன்பிறகு ஏராளமான படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் அதிக பிரபலமானார். பாலு மகேந்திரா இயக்கத்தில் சதிலீலாவதி என்ற படத்தில் கமலுக்கு ஜோடியாக கோவை சரளா நடித்திருந்தார். இப்போதும் சினிமாவில் அவர் பிஸியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை கோவை சரளா திருமணம் செய்து கொள்ளாதது குறித்து கூறியதாவது, நான் திருமணம் செய்தவர்களை பார்த்து சொன்னா கேட்க மாட்டறீங்களே என்று கேட்டு சிரித்துக்கொண்டு இருக்கிறேன். எப்படியும் மனுஷன் தனியா வாழ்ந்துதான் ஆகணும். கல்யாணம் செய்தால் கடைசி வரை புருஷனை கையில் பிடிச்சுட்டு போக முடியாது.

- Advertisement -

ஒருவேளை ஏதோ காரணங்களால் நம்மை பாதியில் விட்டுட்டு அவர் போகலாம். நம்மை விட்டு ஓடிப் போகலாம் அல்லது ஒரேயடியாக மேலே கூட போய்விடலாம். எப்படியும் தனியாக தானே இருந்தாகணும்? அதுமட்டுமின்றி சின்ன வயதில் இருந்தே எனக்குள் என்னை அறியாமல் ஆன்மிகம் இருந்திருக்கலாம். ஆனால் அது எனக்கு தெரியவில்லை.

எதிர்காலத்தில் நான் இப்படி இருக்க வேண்டும், 10 வயதில் இப்படி இருக்க வேண்டும். என் முகம் மக்களுக்கு தெரிய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்ததால் திருமணம் குறித்த எண்ணமே வரவில்லை. குதிரைக்கு கடிவாளம் போட்டது போல என் பார்வை சினிமாவை நோக்கியே இருந்து விட்டது. அதனால் திருமணம் குறித்து கவலையே படவில்லை என்று நடிகை கோவை சரளா வெளிப்படையாக அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்