- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் மோகன் ரவிக்கு மீண்டும் ஜோடியாக நடிக்கும் பொன்னியின் செல்வன் பட நடிகை - ஆனா...

நடிகர் மோகன் ரவிக்கு மீண்டும் ஜோடியாக நடிக்கும் பொன்னியின் செல்வன் பட நடிகை – ஆனா படத்துக்கு அர்ஜூன் பட டைட்டிலை வைக்க பிளான் பண்ணினாங்களாமே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் அட்லி. நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கிய சில படங்களும் நல்ல கவனம் பெற்றன. அந்த வகையில் இயக்குனர்கள் அட்லி மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஷியாம்.

இவர் தற்போது ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் நடிகர் ரவி மோகன் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு முதலில் ஜென்டில்மேன் என டைட்டில் வைப்பதாக இருந்தது. ஆனால் இதுகுறித்து ஜெண்டில்மேன் பட இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோனிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

- Advertisement -

இந்த படத்துக்கு ஜென்டில்மேன் என பெயர் வைக்கலாம் என திட்டமிட்டு இருந்தபோது ஜென்டில்மேன் 2 படம் திடீரென வெளியானது. அந்த படம் மிக மோசமான தோல்வியை தழுவிய நிலையில் ரவிமோகன் நடிக்கும் புதிய படத்துக்கு ஜென்டில்மேன் என பெயர் வைக்க வேண்டாம் என்ற முடிவுக்கு படக்குழு வந்துவிட்டது.

இதையடுத்து தற்போது இந்த படத்துக்கு ஒயிட் என டைட்டில் வைத்துள்ளனர். படம் பிளாக் மணி அதாவது கருப்பு பணம் குறித்த கதையை அடிப்படையாக கொண்டது. அதனால் ஒயிட் என்ற டைட்டில் படத்துக்கு பொருத்தமாக அமைந்துள்ளது. மேலும் இந்த படத்தில் மிக முக்கியமான ஒரு ரோலில் நடிகர் ரவி மோகன் நடிக்கிறார்.

- Advertisement -

மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க இன்னும் நடிகை கமிட் செய்யப்படவில்லை. பில்லா படத்தில் அனுஷ்கா நயன்தாரா நடித்ததை போன்ற ஒரு ஸ்டைலிஷான தோற்றத்தில் கெட்டப்பில் இந்த படத்தில் கதாநாயகி நடிக்க உள்ளார். அதனால் அதற்கு ஏற்ப ஸ்டைலிஷான ஒருர கதாநாயகியை தேடும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா துலிபாலாவை இந்த படத்தில் நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது.

ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் ரவி மோகனுடன் சோபிதா துலிபாலா நடித்திருக்கிறார். அதனால் ஒயிட் படத்தில் இந்த கேரக்டரில் அவர் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்ற கோணத்தில் படக்குழுவினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். ஏற்கனவே நடிகர் ரவி மோகனுக்கு பொன்னியின் செல்வன் படத்தில் ஜோடியாக நடித்தவர் என்பதால் இந்த படத்தில் அவர் கண்டிப்பாக கமிட் ஆவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்