- Advertisement -
Homeபொழுதுபோக்குசசிக்குமார் நடிக்க மறுத்த படத்தில் கமிட் ஆன இயக்குனர் அமீர் - படத்தின் ஹீரோ யார்...

சசிக்குமார் நடிக்க மறுத்த படத்தில் கமிட் ஆன இயக்குனர் அமீர் – படத்தின் ஹீரோ யார் தெரியுமா? அட வேற லெவல் கேரக்டரா இருக்குதே?

- Advertisement -

திமுக குடும்பத்திலிருந்து கருணாநிதி முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் கிருத்திகா உதயநிதி இன்பன் உதயநிதியை தொடர்ந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகர் அருள்நிதி. வம்சம் படம் மூலம் பாண்டிராஜ் இயக்கத்தில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அவர் ஹீரோவாக அறிமுகமானார்.

தொடர்ந்து அவர் நடித்த பல படங்கள் பெரிய கவனம் பெற்றன. குறிப்பாக அஜய் ஞானமுத்து இயக்கத்தில் டிமாண்டி காலனி 1 டிமாண்டி காலனி 2 படங்கள் அவருக்கு பெரிய வரவேற்பை பெற்று தந்தன. வரும் செப்டம்பர் 10ம் தேதி டிமான்டி காலனி 3 படம் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான அருள்வான் படத்தில் கலெக்டர் கேரக்டரில் அருள்நிதி நடித்திருந்தார். வழக்கமாக ஹாரர் படங்களில் அதிகமாக நடித்து வரும் அருள்நிதி இந்த படத்தில் கலெக்டர் கேரக்டரில் மிகச் சிறப்பான அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து பல படங்களில் நடிகர் அருள்நிதி கமிட்டாகி நடித்து வருகிறார். நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பது அவரது வழக்கமாக உள்ளது.

இதற்கிடையே இயக்குனர் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி பம்பர் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்போது அதே இயக்குனர் இயக்கும் ஒரு புதிய படத்தில் அருள்நிதி ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் இயக்குனர் அமீர் நடிக்கிறார். இயக்குனர் அமீர் பருத்திவீரன் மௌனம் பேசியதே ராம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர். ஆனால் சமீபகாலமாக படங்கள் இயக்குவதை மறந்து விட்டு நடிகராக படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

- Advertisement -

அந்த வரிசையில் ஒரு புதிய படத்தில் அருள்நிதியுடன் ஒரு முக்கியமான கேரக்டரில் அவர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் இந்த படத்தில் அந்த கேரக்டரில் நடிக்க இருந்தவர் இயக்குனர் சசிகுமார் தான். ஆனால் கால்சீட் பிரச்சினை காரணமாக அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது.

இந்த சூழலில் சசிகுமார் நடிக்க வேண்டிய கேரக்டரில் இயக்குனர் அமீர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் இயக்குனர் அமீருக்கு ஒரு சிறந்த நடிகராக ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெற்றுத்தரும் என்று சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் இயக்குனர் அமீர் என்ற சிறந்த படைப்பாளி அவ்வப்போது நல்ல படங்களையும் ரசிகர்களுக்கு தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்