தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணி செய்தவர் எஸ்ஜே சூர்யா. வசந்த் இயக்கத்தில் அஜீத்குமார் நடித்த ஆசை போன்ற சில படங்களில் அவர் பணி செய்திருக்கிறார். பிறகு அஜீத்குமார் 2 வேடங்களில் நடித்த வாலி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. அடுத்து விஜய் ஜோதிகா நடித்த குஷி படமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
அதன்பிறகு எஸ்ஜே சூர்யா நியூ அன்பே ஆருயிரே போன்ற படங்களை டைரக்ட் செய்தார். அவரே அந்த படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். பிறகு வியாபாரி திருமகன் கள்வனின் காதலி போன்ற சில படங்களில் அவர் ஹீரோவாக நடித்து பெரிய அளவில் வரவேற்பை பெற்றார். பிறகு 10 ஆண்டுகள் திடீரென சினிமாவை விட்டே காணாமல் போனார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இறைவி படம் மூலம் நடிகர் எஸ்ஜே சூர்யா தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து ஸ்பைடர் மாநாடு மார்க் ஆண்டனி ராயன் கேப்டன் மில்லர் இந்தியன் 2 என பல படங்களில் நடித்து முன்னணி வில்லன் நடிகராக மாறினார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் அவருக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் தனது கனவு படமான கில்லர் என்ற படத்தை இயக்கி அவரே தயாரித்து ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இந்த படத்துக்காக ரூ. 40 கோடி வரை பட்ஜெட்டில் சொந்த பணத்தை போட்டு அந்த படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்துக்காக ப்ரீ புரடக்சன்ஸ் பணிகளுக்காகவே பல கோடி ரூபாய் அவர் செலவு செய்திருக்கிறார்.
இதற்கிடையே சில வாரங்களுக்கு முன்பு கில்லர் படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனது சொந்த தயாரிப்பு படத்தில் இப்படி ஒரு கொடூரமான சம்பவம் நடந்ததால் எஸ்ஜே சூர்யாவில் மிகவும் அப்செட் ஆகி விட்டார்.
மேலும் அரும்பாடுபட்டு சம்பாதித்த பணத்தை எல்லாம் கொட்டி கில்லர் படத்தை அவர் உருவாக்கி வருகிறார். இந்த சூழலில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்தது அவரை பெரிய அளவில் பாதிப்படைய செய்துள்ளது. அதனால் கில்லர் படப்பிடிப்பை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு அவர் கமிட் ஆன படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அதனால் கில்லர் படப்பிடிப்பு தொடருமா? எப்போது ஷூட்டிங் என்பதில் தொடர்ந்து சந்தேகமும் குழப்பமும் நீடிக்கிறது.





