- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் பாரதிராஜா குறித்து வெளியான பரபரப்பான தகவல்… மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை!

இயக்குனர் பாரதிராஜா குறித்து வெளியான பரபரப்பான தகவல்… மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை!

- Advertisement -

தமிழ் சினிமாவில் அடையாளங்களில் ஒருவர் இயக்குனர் பாரதிராஜா. சிவாஜி ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜயகாந்த் சத்யராஜ் கார்த்திக் என முன்னணி ஹீரோக்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். இவரது சீடர் கே பாக்யராஜ் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த குருவுக்கு பெருமை சேர்த்த சிறந்த கலைஞர்.

இயக்குனர் பாரதிராஜா கடந்த பல ஆண்டுகளாக படங்கள் டைரக்ட் செய்வதை தவிர்த்துவிட்டு அவ்வப்போது தனது வயதுக்கு ஏற்ப அப்பா அல்லது தாத்தா கேரக்டரில் நடித்து வந்தார். அவரது நேர்த்தியான நடிப்பும் வசன உச்சரிப்புகளும் ஒரு நடிகராகவும் அவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டாட வைத்தது. இதற்கிடையே அவரது மகன் நடிகர் மனோஜ் சில மாதங்களுக்கு முன்பு மறைந்தார். இது பெரிய அளவில் பாரதிராஜாவை நிலைகுலைய செய்துவிட்டது.

- Advertisement -

இப்போது இயக்குனர் பாரதிராஜாவுக்கு 84 வயதாகிறது. முதுமை காரணமாக அவரது உடல் நலம் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சமீபத்தில் பாரதிராஜாவின் நெருங்கிய நண்பர் கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாரதிராஜாவை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். அதுகுறித்து கவிஞர் வைரமுத்து, இயக்குனர் இமயம் பாரதிராஜா குணமடைந்து வருகிறார் என்ற தகவலையும் ஒரு கவிதையாக பதிவிட்டு இருந்தார்.

- Advertisement -

இந்த சூழலில் நேற்றிரவு முதல் இயக்குனர் பாரதிராஜா மறைந்து விட்டதாக சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு அஞ்சலி தெரிவித்து வருகின்றனர். இதை பார்த்து பலரும் தங்களது பதிவுகளை செய்து வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இது பாரதிராஜா ரசிகர்கள் மத்தியிலும் கோலிவுட் வட்டாரத்திலும் ஒருவித மன வேதனையை ஏற்படுத்தியது.

ஆனால் இயக்குனர் பாரதிராஜா இன்னும் நலமாக உள்ளார் என்ற நிலையில் பாரதிராஜாவின் மகள் வெளியிட்ட பதிவில், அப்பா நலமாக இருக்கிறார் என்று கூறியிருக்கிறார். மேலும் பாரதிராஜாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பிலும் ஒரு அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் மூச்சுத்திணறல் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குனர் பாரதிராஜாவின் உடல்நலம் இப்போது சீராக உள்ளது என்றும் உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்