- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழக அரசின் விருது என்பது சொந்தக்காரங்களுக்கு தருகிற குடும்ப விருதா? செலக்டிங் கமிட்டி அறிவோடு செயல்பட்டதா?...

தமிழக அரசின் விருது என்பது சொந்தக்காரங்களுக்கு தருகிற குடும்ப விருதா? செலக்டிங் கமிட்டி அறிவோடு செயல்பட்டதா? – கோபத்தில் கொந்தளித்த டிவி சீரியல் நடிகை!

- Advertisement -

தமிழக அரசு சார்பில் சமீபத்தில் தமிழ் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 2014ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான சின்னத்திரை மாநில விருதுகளும் அறிவிக்கப்பட்டன. இந்த 8 ஆண்டுகளில் ஒளிபரப்பான மக்கள் மனதில் இடம்பிடித்த சீரியல்கள் நடிகர் நடிகைகளுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டன.

தமிழக அரசின் இந்த விருதுகள் குறித்து பிரபல டிவி சீரியல் நடிகை லட்சுமி தனது வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, தமிழக அரசு 2014 முதல் 2022 வரை சின்னத்திரை நடிகர்களுக்கான விருதுகளை அறிவித்துள்ளது. ரொம்பவும் மகிழ்ச்சி. விருது பெறுகிறவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

- Advertisement -

ஆனால் எனக்கு விருது கிடைக்கவில்லை. அதற்கான காரணம் என்ன என்று எனக்கு தெரியவில்லை. 2014 முதல் 2022 வரை விருது வழங்கப்படுகிறது என்றால் 2018ல் இருந்து 2020 வரை செம்பருத்தி சீரியல் பீக்கில் இருந்தது. நான் அந்த சீரியலில் வில்லியாக நடித்திருந்தேன். அந்த சீரியலை பார்த்த அனைவரும் நன்றாக நடித்திருக்கிறீர்கள் என்று என்னை பாராட்டினார்கள். இந்த சீரியலுக்கு ஏன் விருது கிடைக்கவில்லை?

தமிழக அரசு விருது என்பது குடும்ப விருது இல்லையே? குடும்பத்தினர் நெருங்கியவர்கள் சொந்தக்காரர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் விருதா? இந்த விருது ஏன் எனக்கு கிடைக்கவில்லை? விருதுகளை வழங்குவதற்கு என்று ஒரு செலக்டிங் கமிட்டி இருக்கும். அந்த செலக்டிங் கமிட்டியை தேர்வு செய்பவர் யார்? அவர்கள் அறிவோடு தேர்வு செய்து இருந்தால் என்னைப் போன்றவர்களுக்கு நிச்சயம் விருது கிடைத்திருக்கும்.

- Advertisement -

ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. ஒரு சேனலையே புறக்கணித்து இருக்கிறார்கள். அதில் நடித்த எத்தனை பேருக்கு என்னைப் போல மனசு வலித்திருக்கும்? முதலில் இது போன்ற தலைமை இடத்திற்கு வருபவர்களுக்கு முழு தகுதி இருக்கிறதா என்று பார்த்து அவர்களை அந்த இடத்தில் உட்கார வையுங்கள். அவர்கள் சுடும் அப்பளத்தை மட்டும் சுட்டு சாப்பிட்டு கொண்டு அதை அடுத்தவர்களுக்கும் படைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

விருதுகளை தேர்வு செய்பவர்கள் அவர்களுக்கு சாதகமானவர்களுக்கு மட்டும் விருது வழங்குகிறார்கள் என்றால் அதை தமிழ்நாடு அரசு விருது என்று சொல்ல வேண்டாம். அதை உங்கள் குடும்ப விருது என்று சொல்லிக் கொள்ளுங்கள் என்று நடிகை லட்சுமி அந்த வீடியோவில் ஆதங்கமாக பேசியிருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திரைப்பட விருதுகள் போலவே டிவி சீரியல் விருதுகளிலும் தமிழக அரசு மீது கடும் விமர்சனம் கிளம்பியுள்ளது.

- Advertisement -

சற்று முன்