- Advertisement -
Homeபொழுதுபோக்குபின்வாங்கும் சூர்யா படத்தின் ரிலீஸ் தேதி... உறுதி செய்த தயாரிப்பாளர்... இதுக்காகவா இந்தா பேச்சு பேசுனீங்க...

பின்வாங்கும் சூர்யா படத்தின் ரிலீஸ் தேதி… உறுதி செய்த தயாரிப்பாளர்… இதுக்காகவா இந்தா பேச்சு பேசுனீங்க என்று கலாய்க்கும் ரசிகர்கள்…

- Advertisement -

சூர்யாவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக திரையரங்குகளில் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை. கடைசியாக அவர் விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் ஒரு பத்து நிமிடங்கள் மட்டுமே வந்து சென்றார். ஆனால் அதன் தாக்கம், மிகப்பெரிய அளவில் இருந்தது.

 

- Advertisement -

சொல்லப்போனால், சூர்யாவுக்கு அப்படி ஒரு நெகடிவ் செய்து கொடுத்து லோகேஷ் கனகராஜ் மிகப்பெரிய ஒரு பில்டப்பை ஏற்றிவிட்டார் என்று தான் கூற வேண்டும். அந்த அளவுக்கு பலரும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை பற்றி பேசினார்கள். ஆனால் இதன் பிறகு தனது அடுத்த படத்தை வெளியிடும் வேளையில் சூர்யா நீண்ட காலத்தை எடுத்துக் கொண்டார்.

 

- Advertisement -

இதில் முதலாவதாக அவர் தனது ஆசான் இயக்குனர் பாலா உடன் தான் இணைந்து, வணங்கான் திரைப்படத்தில் நடித்தார். கன்னியாகுமரியில் இதன் சூட்டிங் நடைபெற்றது. ஆனால் திடீரென கதாநாயகனுக்கும் இயக்குனருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட படத்தில் இருந்து வெளியேறினார் சூர்யா.

 

இதன் பிறகு வணங்கான் திரைப்படத்திற்கு ஹீரோவானார் அருண் விஜய். இந்தப் பக்கம் சூர்யா, இயக்குனர் சிறுத்தை சிவா உடன் இணைந்து கங்குவார் திரைப்படத்தில் நடித்தார். கிட்டத்தட்ட ஓராண்டாக இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யூ வி நிறுவனம் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்த திரைப்படத்தை எடுத்திருக்கிறது.

 

தெலுங்கில் வெளியான மகதீரா திரைப்படத்தைப் போல பூர்வ ஜென்மத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் வெளியான இதன் ட்ரெய்லர் வெளியாகி போதிய வரவேற்பை பெறவில்லை என்று தான் கூற வேண்டும். இப்படியான சூழலில் கங்குவா திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

 

ஆனால் அதே தேதியில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் வேட்டையன் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே தேதியில் இரண்டு பெரிய திரைப்படங்கள் வெளியானால் அது வசூலை பாதிக்கும் என்று பலரும் கூறி வந்தார்கள். இப்படியான சூழலில், கங்குவா திரைப்படம் ரேஸில் இருந்து பின்வாங்கி இருக்கிறது. படம் குறித்த ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்து விட்டதால் சூர்யா ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

 

- Advertisement -

சற்று முன்