- Advertisement -
Homeபொழுதுபோக்குபோலீஸ் வழக்கில் சிக்கிய கும்கி பட நாயகி லட்சுமிமேனன்… வலைவீசி தேடும் கேரளா போலீசர் -...

போலீஸ் வழக்கில் சிக்கிய கும்கி பட நாயகி லட்சுமிமேனன்… வலைவீசி தேடும் கேரளா போலீசர் – என்னப்பா இது கதாநாயகி வில்லியாக மாறிட்டாங்களே?

- Advertisement -

கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை லட்சுமி மேனன். தமிழில் இயக்குனர் பிரபுசாலமன் இயக்கிய கும்கி என்ற படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இதுதான் பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவுக்கும் முதல் படமாக இருந்தது. இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து சுந்தரபாண்டியன் குட்டிப்புலி பாண்டியநாடு புலிக்குத்தி பாண்டி கொம்பன் சந்திரமுகி 2 உள்ளிட்ட பல படங்களின் லட்சுமிமேனன் நடித்தார். இதில் பல படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற வெற்றிப் படங்களாக இருந்தன. கடைசியாக தமிழில் நடிகர் ஆதி நடித்த சப்தம் என்ற படத்தில் லட்சுமிமேனன் நாயகியாக நடித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் கேரளம் மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் மதுபானம் பார் ஒன்றில் ஐடி ஊழியர் ஒருவருடன் ஒரு கும்பலுக்கு தகராறு ஏற்பட்டது. அப்போது நடந்த பிரச்னையில் அந்த ஐடி ஊழியர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஐடி ஊழியர் கேரளா போலீசில் புகார் அளித்தார்.

அவர் அளித்த புகாரில், ஐடி ஊழியரை கடத்திய கும்பலை சேர்ந்த மிதுன் அனீஸ் மற்றும் சோனா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த கும்பலில் நடிகை லட்சுமிமேனனும் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கேரளா போலீசார் அவரையும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் இந்த தகவலை அறிந்த நடிகை லட்சுமிமேனன் இப்போது தலை மறைவாகிவிட்டார்.

- Advertisement -

கேரளா போலீசார் தொடர்ந்து பலமுறை முயற்சித்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. லட்சுமிமேனன் தற்போது தமிழில் யோகி பாபுவுடன் மலை என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் கௌதம் கார்த்திக் உடன் அவர் சிப்பாய் என்ற படத்தில் நடித்த நிலையில் அந்த படம் பாதியில் நின்று போனது.

நடிகர் பிரபுதேவாவுடன் நடித்த யங் மங் சங் என்ற படம் வெளியாகாமல் பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கிறது. தமிழில் மார்க்கெட் இல்லாத நிலையில் ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமிமேனனுக்கு தொடர்பு இருப்பதாகவும், ஆனால் அவர் விசாரணைக்கு பயந்து தலைமறைவாகி விட்டதாகவும் தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்