தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக கடந்த 1990களில் வலம் வந்தவர் நடிகை மீனா. ரஜினி கமல் அஜீத் சரத்குமார் சத்யராஜ் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாள மொழி படங்களிலும் நாயகியாக பல படங்களில் நடிகை மீனா நடித்திருக்கிறார்.
குறிப்பாக என் ராசாவின் மனசிலே எஜமான் அவ்வை சண்முகி நாட்டாமை முத்து தாய்மாமன் ராஜகுமாரன் ஆனந்த பூங்காற்றே மாமன் மகள் என பல படங்களில் மீனா மிக சிறப்பாக நடித்திருக்கிறார். 50 வயதுகளை நெருங்கும் நிலையிலும் இப்போதும் தமிழ் மற்றும் மலையாளம் படங்களில் மீனா பிஸியாக நடித்து வருகிறார்.
நடிகை மீனா சில ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் வித்யாசாகரை இழந்தார். நுரையீரல் தொற்று பாதிப்பு காரணமாக அவர் மறைந்த நிலையில் தனது மகள் நைனிகாவுடன் சிங்கள் பேரண்ட் ஆக மீனா இருந்து வருகிறார். இதற்கிடையே அவர் 2வது திருமணம் குறித்து பரவும் வதந்திகள் குறித்தும் அவர் சில தினங்களுக்கு முன்பு தனது வருத்தத்தை தெரிவித்து இருந்தார். தனியாக இருக்கிறேன் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா என மீனா கோபமாக கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்றுப் பேசிய நடிகை மீனா கூறியதாவது, பாகுபலி படத்தை பார்த்ததும் அதில் ராஜமாதா சிவகாமி தேவி கேரக்டரில் நடித்த ரம்யா கிருஷ்ணனுக்கு உடனே போன் செய்து பாராட்டினேன். நான் மட்டும்தான் எப்பவும் ஜெயிக்கணும் நான் மட்டும்தான் எப்பவும் சந்தோஷமாக இருக்கணும் என்று நினைப்பது ஆரோக்கியமானது அல்ல.
பிறர் வெற்றி பெறும் போது அவர்களுக்காக மனதார மகிழ்வதும், திறமையை அங்கீகரிப்பதும் ஒருத்தருக்குள்ள இருக்க வேண்டிய மிக முக்கியமான நல்ல குணம். தேவர் மகன் படையப்பா படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்தது எனக்கு வருத்தம் தான். ஏனெனில் கமல் ரஜினி படங்களில் அந்த படங்கள் எவ்வளவு முக்கியமான படங்கள் என்று எல்லாருக்குமே தெரியும்.
ஆனால் அந்த படங்களில் நான் நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை. அப்படி கிடைக்காததை நினைத்து கவலைப்படாமல் ரஜினியுடன் முத்து படத்தஇலும் கமலுடன் அவ்வை சண்முகி படங்களிலும் நடித்தேன். அப்போது கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்க வேண்டும் என்கிற பாசிட்டிவ் எண்ணம்தான் என்னை சரியாக வழிநடத்தியது என்று நடிகை மீனா வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





