- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்படி ஒரு வாழ்க்கைக்கு நான் மாறிவிட்டேன்… அதனால் அந்த விஷயங்களை சமூக வலைதளங்களில் கொண்டு வராதீங்க...

அப்படி ஒரு வாழ்க்கைக்கு நான் மாறிவிட்டேன்… அதனால் அந்த விஷயங்களை சமூக வலைதளங்களில் கொண்டு வராதீங்க – முன்னாள் நடிகை வைத்த முக்கிய கோரிக்கை!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் பல படங்களில் கவர்ச்சியான வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்தவர் நடிகை மும்தாஜ். இயக்குனா் டி ராஜேந்தர் இயக்கிய மோனிஷா என் மோனாலிசா என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நடிகை மும்தாஜ் அறிமுகமானார். தொடர்ந்து லண்டன் சாக்லேட் குஷி என பல படங்களில் மும்தாஜ் நடித்தார்.

அவருக்கு சில படங்களைத் தவிர பெரும்பாலான படங்களில் கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் கிளாமர் வேடங்களில் கவர்ச்சியான கெட்டப்களில் அதிகமாக மும்தாஜ் நடித்திருந்தார். ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு மும்தாஜ் ஆன்மீகத்தில் முழு ஆர்வம் காட்டினார்.

- Advertisement -

மும்தாஜ் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர். இஸ்லாமியர்களின் முக்கிய கடமையான ஹஜ் கடமையை முடித்து முழுமையாக இஸ்லாமிய பெண்ணாக மாறி சில ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனாலும் அவர் நடித்த படங்களிலிருந்து பழைய கவர்ச்சி படங்கள், வீடியோக்கள் இன்னமும் இணையதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து முன்னாள் நடிகை மும்தாஜ் ஒரு பதிவில் கூறியிருப்பதாவது, 16 வயதில் நான் சினிமாவில் நடிக்க வந்தேன். பல படங்களில் நடித்தேன். சினிமாவில் நடிப்பது என்பது ஒரு தொழில். ஒரு கேரக்டராக மாறி அந்த கேரக்டரில் நடிப்பதோடு என்னுடைய பணி முடிந்துவிட்டது என்று கருதினேன். ஆனால் இஸ்லாமிய பெண்ணான நான் திரைப்படங்களின் நடிப்பது இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதை ஒரு கட்டத்தில் புரிந்து கொண்டு நடிப்பதை நிறுத்தி விட முடிவு செய்தேன்.

- Advertisement -

ஆனாலும் நடிப்பு தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாததால் சில உடைகளை அணிய மாட்டேன், சில கேரக்டர்களில் நடிக்க மாட்டேன் என்று வலுக்கட்டாயமாக சொன்னேன். அதை மற்றவர்கள் ஏற்பதாக இல்லை. அதனால் திரைப்படங்களின் நடிப்பதை உறுதியாக நிறுத்திக் கொண்டேன். இப்போது நான் சாதாரண ஒரு இஸ்லாமிய பெண்ணாக குர்ஆன் ஓதுவது ஹிஜாப் அணிவது எளிய உணவுகளை உட்கொள்வது என ஒரு அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன்.

இதுதான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. என்னை நேசிக்கிற மக்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். என்னுடைய பழைய போட்டோக்கள் வீடியோக்களை தயவுசெய்து ஷேர் பண்ணாதீர்கள். என் மனமாற்றத்திற்கு மதிப்பு கொடுங்கள். என் வயதுக்கு என் உடைக்கு என் உணர்வுகளுக்கு தயவு செய்து மதிப்பு கொடுங்கள் என்று முன்னாள் நடிகை மும்தாஜ் அந்த பதிவில் கூறியிருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்