- Advertisement -
Homeபொழுதுபோக்குசொல்லி வைத்ததுபோல் ரஜினி பட வாய்ப்புகளை தவிர்த்து வந்த பிரபல நடிகை, அப்படி என்னதான் காரணமோ?

சொல்லி வைத்ததுபோல் ரஜினி பட வாய்ப்புகளை தவிர்த்து வந்த பிரபல நடிகை, அப்படி என்னதான் காரணமோ?

- Advertisement -

ரஜினிகாந்த் நடிக்க வந்த புதிதிலேயே ரசிகர்கள் பலரையும் தனது ஸ்டைலான நடிப்பால் கவர்ந்துவிட்டார். ஒரு கட்டத்தில் சூப்பர் ஸ்டாராக அவர் உயர்ந்த பிறகு அவருக்கு ஜோடியாக நடிக்க பல நடிகைகள் போட்டி போட்டனர். ரஜினிகாந்த் படத்தில் ஒரு காட்சியிலாவது வந்துபோய்விட வேண்டும் என காலந்தோறும் காத்துக்கிடக்கும் நடிகர், நடிகைகள் பலர் உண்டு.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த ஒரு டாப் நடிகை ஒருவர், ரஜினிகாந்த் பட வாய்ப்புகளை தவிர்த்தே வந்திருக்கிறார். அவர் யார்? அதற்கு அவர் சொன்ன காரணம் என்ன? என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

- Advertisement -

80களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நளினி. “உயிருள்ள வரை உஷா”, “நூறாவது நாள்”, “ஊறவை காத்த கிளி” போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த நளினி, 1987 ஆம் ஆண்டு நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். எனினும் கடந்த 2000 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

அதன் பின் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் நளினி. மேலும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நளினி நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை நளினி சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார்.

- Advertisement -

அப்போது பேசிய அவர், தான் தமிழ் சினிமாவின் பிசியான நடிகையாக வலம் வந்துகொண்டிருந்த காலகட்டத்தில் ரஜினிகாந்துடன் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் வந்ததாம். ஆனால் அதை எல்லாம் அவர் மறுத்துவிட்டாராம். சில திரைப்படங்களில் தொடக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அதன் பின் விலகி இருக்கிறார். சூழ்நிலை பிடிக்காத காரணங்களால் அத்திரைப்படங்களில் இருந்து விலகிவிட்டதாக ஒரு காரணத்தையும் கூறுகிறார்.

- Advertisement -

சற்று முன்