தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் இந்தி மொழி படங்களிலும் பிரபலமான ஒரு நடிகையாக இருக்கிறார். அதனால் தமிழில் மட்டுமின்றி மற்ற மொழி படங்களிலும் அவருக்கு நடிக்க வாய்ப்புகள் வருகின்றன.
கடைசியாக நடிகை நயன்தாரா நடித்த படம் டெஸ்ட். இந்த படத்தில் மாதவன் சித்தார்த் மீரா ஜாஸ்மின் காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தியேட்டர்களில் ரிலீஸ் ஆகாமல் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனால் நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனத்திற்கு ரூ. 50 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது நயன்தாரா டாக்சிக் மண்ணாங்கட்டி டியர் ஸ்டூடண்ட் எம்எம்எம்என் மூக்குத்தி அம்மன் 2 உள்ளிட்ட சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இதற்கிடையே தெலுங்கில் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் இயக்குனர் அனில் ரவிபொடி இயக்கத்தில் புதிய படம் உருவாகிறது. இதற்கான ப்ரீ புரொடக்சன் பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகின்றன.
அதனால் இந்த படத்தில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக கதாநாயகியாக நடிக்க நயன்தாராவை அந்த படத்தின் இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினர் அணுகி உள்ளனர். படத்தின் கதையை கேட்ட நடிகை நயன்தாரா இந்த படத்தில் நடிப்பதற்கு உடனே ஓகே சொல்லி உள்ளார். ஆனால் இந்த படத்தில் நடிக்க அவர் தனக்கு சம்பளமாக 18 கோடி ரூபாய் கேட்டுள்ளார்.
இதைக்கேட்டு படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் பலத்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கமாக நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க ரூ. 10 கோடி முதல் 12 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கி வரும் நிலையில், இப்போது இந்த படத்தில் நடிப்பதற்காக 18 கோடி ரூபாய் சம்பளம் கேட்டது, தெலுங்கு சினிமா துறையினரை கிடுகிடுக்க வைத்துள்ளது.
நடிகர் சிரஞ்சீவியுடன் நடிகை திரிஷா நடித்த விஸ்வம்பரா என்ற படம் விரைவில் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை அந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில், மீண்டும் இந்த புதிய படத்தில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக மீண்டும் நடிகை திரிஷாவே நடிக்க வாய்ப்புள்ளதாகவும் ஒரு தகவல் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் வேகமாக பரவி வருகிறது.





