- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் சம்பளத்தை உயர்த்திய நடிகை, காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது சரிதான் - அதுக்காக இது...

மீண்டும் சம்பளத்தை உயர்த்திய நடிகை, காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது சரிதான் – அதுக்காக இது பகல் கொள்ளையா இருக்குதேங்க

- Advertisement -

முன்னணி நட்சத்திரங்களாக உள்ள சினிமா நடிகர், நடிகையர் பெறுகிற சம்பளத்தை கேட்டால், சாதாரண வாழ்க்கை வாழும் ஒரு சாமானியனால் அதை ஜீரணித்துக்கொள்ளவே முடியாது. ஏனெனில், மாதம் முழுக்க இரவு, பகலாக உழைத்தாலும் சாதாரண மனிதர்களின் வருமானம் 25 ஆயிரம் ரூபாயை கூட தாண்டுவதில்லை என்பதுதான் நிஜம்.

ஆனால், ஒரு சினிமாவில் நடிக்க 30 நாட்கள் முதல் அதிகபட்சம் 3 மாதங்கள் வரை கால்ஷீட் தரும் நடிகர், நடிகையர் வருமானம், பல கோடிகளாக இருக்கிறது. அதுவும் ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்றவர்களின் சம்பளம் 100 கோடி ரூபாய் முதல் 200 கோடி ரூபாய் வரை நீடிக்கிறது.

- Advertisement -

இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், படத்தில் நடிக்கும் கதாநாயகர்களுக்கு இப்படி நூற்றுக்கணக்கில் கோடிகளை வாரிக் கொடுத்துவிட்டு தவிக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் இறுதியில் வேறு வழியின்றி, படத் தயாரிப்பு செலவுகளை மிகவும் குறைத்து விடுகின்றன. இதில் படம் வெற்றி பெற்றாலும், தோற்றாலும் நடிகர்களுக்கு கவலையில்லை. படம் தோற்றுப் போனால், தயாரிப்பு நிறுவனங்கள்தான் சிக்கலில் தவிக்க நேரிடும்.

இயக்குநர் ஹரி இயக்கத்தில், மலையாளத்தில் இருந்த தமிழுக்கு அறிமுகமானவர் நயன்தாரா. ஐயா படத்தில், சரத்குமாருக்கு ஜோடியாக நடித்தார். ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன் பாடலில் இடுப்பை வளைத்து நெளித்து நளினமாக நடனமாடி ரசிகர்களை வசீகரித்தார். அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

- Advertisement -

துவக்கத்தில், ஹீரோக்களுக்கு மட்டுமே ஜோடியாக நடித்த இவர், பிறகு தன்னை மையப்படுத்திய கதாநாயகிக்கான படங்களில் நடிக்க துவங்கினார். அந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், நயன்தாராவின் சம்பளமும் லட்சங்களில் இருந்து கோடிகளுக்கு மாறியது. இதற்கிடையே இயக்குநர் விக்னேஷ் சிவனை, நயன்தாரா காதலித்து திருமணம் செய்து கொண்டார். வாடகைத் தாய் மூலம், இரட்டை குழந்தைகளுக்கும் தாயானார்.

இதற்கிடையே, இதுவரை ரூ. 10 கோடி சம்பளம் வாங்கி வந்த நயன்தாரா, தனது சம்பளத்தை ரூ. 12 கோடியாக உயர்த்தி உள்ளார். அவரை விட்டால், தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு வேறு நடிகைகளே இல்லை என்ற மனநிலையில் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் இருக்கும் வரை, இன்னும் சில மாதங்களில் ரூ. 15 கோடியாக தன் சம்பளத்தை நயன்தாரா உயர்த்தினாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.

- Advertisement -

சற்று முன்