- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜயும் சீமானும் அரசியலில் இணைந்தால் அவர்களுடன் நானும் சேர்ந்து கொள்வேன், விஜய் அழைத்தால் அரசியலுக்கு வருவேன்...

விஜயும் சீமானும் அரசியலில் இணைந்தால் அவர்களுடன் நானும் சேர்ந்து கொள்வேன், விஜய் அழைத்தால் அரசியலுக்கு வருவேன் – பிரபல இயக்குனர் பரபரப்பு பேச்சு

- Advertisement -

நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகராக இருந்து வருகிறார். தி கோட் என்ற அவரது படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. தொடர்ந்து அவரது 69வது படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்க உள்ளார். அதற்கு முன்னதாக திருச்சியில், தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தவும் விஜய் திட்டமிட்டுள்ளார்.

தமிழக அரசியல் மக்களால் கவனிக்கப்படும் ஒரு முக்கிய அரசியல் இயக்கமாக நாம் தமிழர் கட்சி இருந்து வருகிறது. இந்த கட்சியை நடத்தி வரும் இயக்குனர் மற்றும் நடிகர் சீமான், தொடர்ந்து அரசியல் சார்ந்த தனது கருத்துகளை மக்கள் மத்தியில் பேசி வருகிறார். திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக சீமான் தனது கட்சியை பலப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் விஜய், சீமான் இருவரும் இணைந்து எதிர்கால அரசியல் ஈடுபட்டால், அது தமிழக அரசியல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ஏனெனில் எந்தவிதமான பரிசு பொருட்களும், பணம், மதுபாட்டில்களும் தராமல் ஒவ்வொரு தேர்தலிலும் மக்களிடம், உண்மையை மட்டுமே பேசி நேர்மையான ஓட்டுகளை வாங்கி வருகிறார் சீமான் என்பது குறிப்பிடத்தக்கது.

பருத்திவீரன் படம் மூலம் மிகப்பெரிய இயக்குனராக ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றவர் இயக்குனர் அமீர். தொடர்ந்து இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் ரசிகர்களிடம் அதிக கவனத்தை ஈர்த்தவர் அமீர். இந்நிலையில் திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் அமீர், தனது அரசியல் பயணம் குறித்து பேசியிருக்கிறார்.

- Advertisement -

இயக்குனர் அமீர் கூறுகையில், கிராமங்கள் என்பது இந்தியாவின் முதுகெலும்பு. அதனால் சினிமாவில் கிராமத்தை தவிர்த்து எந்த படமும் எடுக்க முடியாது. அரசியலில் அனைவரும் இருக்க வேண்டும். இப்போது எனக்கு இருக்கும் நெருக்கடியில் அரசியலுக்கு வந்தாலும் வரலாம், அப்படிதான் உள்ளுணர்வு சொல்கிறது.

விஜய்க்கு அரசியல் கட்சி துவங்கியதற்கு வாழ்த்துகள் தெரிவித்தேன். விஜய் என்னை அழைத்தால், நிச்சயம் நான் அரசியலுக்கு வருவேன். விஜயுடன் சீமான் இணைந்து செயல்பட உள்ளதாக, அவரே கூறியுள்ளார். என்னை பொருத்தவரை விஜய், சீமான் இருவருடன் இணைந்து நான் அரசியல் பயணம் செய்ய தயாராக இருக்கிறேன், என்று கூறியிருக்கிறார் இயக்குனர் அமீர்.

- Advertisement -

சற்று முன்