சமீபத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண ஆல்பம் அடங்கிய ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அப்போது தனுஷ் மீது நடிகை நயன்தாரா காட்டமாக ஒரு அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். நானும் ரவுடிதான் படக்காட்சிகளை பயன்படுத்தியதாக, நயன்தாரா மீது தனுஷ் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் நடிகை நயன்தாரா ஒரு நேர்காணலில் கூறியதாவது, சரி என எனக்கு தோன்றும் விஷயத்தை செய்ய நான் ஏன் பயப்பட வேண்டும். நான் தவறு செய்தால்தான் பயப்பட வேண்டும். நான் பப்ளிசிட்டிக்காக ஒருவர் ஒருவரது இமேஜை கெடுத்தேன், படத்தின் பிஆர் க்காக அதைச் செய்தேன் என்றெல்லாம் சொல்கிறார்கள். என் நோக்கம் அது அல்ல.
அவரது மேனேஜர் நண்பர்கள் மூலமாக பலமுறை தனுஷை அணுகினோம். ஆனால் முடியவில்லை. விக்னேஷ் சிவன் படத்தில் எழுதிய 4 வரிகளை பயன்படுத்த அனுமதி கேட்டோம். அது எங்களுக்கு ரொம்ப பர்சனல். அந்த 4 வரிகள் எங்களது வாழ்க்கையை பிரதிபலிக்கும் என நான் நினைத்தேன். தனுஷ் முதல் ஆளாக ஓகே சொல்வார் என நினைத்தேன்.
அவர் எனது நண்பராக இருந்தார். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் அது மாறிவிட்டது. அவருக்கு அவரது காரணங்கள் இருக்கலாம். நான் அவரது மேனேஜருடன் பேசினேன். என்னதான் பிரச்சனை என தெரிந்து கொள்ள தனுஷ் உடன் போனில் பேச வேண்டும் என கூறினேன். ஒரே ஒரு போன் கால்தான் கேட்டேன். அவர் என் மீது கோபமாக இருக்கிறாரா அல்லது சுற்றி இருப்பவர்கள் அதை உருவாக்குகிறார்கள் என தெரிந்து கொள்ள நினைத்தேன்.
ஏதாவது மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் இருந்தால் அதை பேசி சரி செய்து கொள்ளலாம் என விரும்பினேன். பெஸ்ட் பிரண்ட்ஸ் ஆக இருக்க வேண்டாம். ஆனால் எங்காவது நேரில் பார்த்தால் ஹாய், எப்படி இருக்கீங்க என பேச முடியும். அப்படியாவது நட்பு இருக்க வேண்டும். அதற்காகதான் நான் முயற்சித்தேன். டிரெய்லரில் இருந்த சூட்டிங் ஸ்பாட் காட்சி எங்கள் போனில் எடுக்கப்பட்ட ஒன்று. அது அவரது புட்டேஜ் அவருக்கு உரிமை இருக்கிறது என சொல்கிறார்கள்.
நான் படத்திலிருந்து எந்த காட்சியையும் எடுத்து பயன்படுத்தவில்லை. பிடிஎஸ் காட்சிகள் எல்லாம் காண்ட்ராக்டில் இந்த காலத்தில்தான் வருகிறது. அப்போது இல்லை. தனுஷ் ஒரு பெரிய நடிகர். பலரும் அவர் மீது மரியாதை வைத்திருக்கிறார்கள். எனக்கும் அவர் மீது மரியாதை இருக்கிறது. ஆனால் இந்த விஷயத்தில் தனுஷ் செய்தது அநியாயம். அதனால்தான் நான் பேசினேன் என நயன்தாரா அந்த நேர்காணலில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





