- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென மலையாள நடிகை நஸ்ரியா… நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பது ஏன்? - சூர்யா 47...

திடீரென மலையாள நடிகை நஸ்ரியா… நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பது ஏன்? – சூர்யா 47 படம் குறித்து வெளியான முக்கிய தகவல்!

- Advertisement -

நடிகை சூர்யா நடிப்பில் கடைசியாக திரைக்கு வந்த படம் ரெட்ரோ. கடந்த மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று இந்த படம் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் டைரக்ட் செய்திருந்தார். நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருந்தார். ரூ. 235 கோடி வசூலித்த இந்த படம் வணிக ரீதியாக வெற்றிப் படம் என்று படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டது. சக்சஸ் மீட்டும் நடத்தப்பட்டது.

தொடர்ந்து நடிகர் சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டார். இது அவரது 45வது படம். நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் திரிஷா ஷிவதா நாயர் சுவாசிகா நட்டி நடராஜ் யோகிபாபு மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இதில் ஆர்ஜே பாலாஜியும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

வக்கீல் மற்றும் அய்யனார் சாமி என 2 கெட்டப்களில் இந்த படத்தில் சூர்யா நடித்திருக்கிறார். இதில் நடிகர் சூர்யா கடவுளாகவும் சில காட்சிகளில் வருவதாக கூறப்படுகிறது. சிங்கம் சிங்கம் 2 படத்துக்கு பிறகு சூர்யாவுக்கு இது மிக முக்கிய ஒரு படமாக இருக்கும் என்றும் பேசப்படுகிறது. வரும் தீபாவளிக்கு எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் சில தவிர்க்க முடியாத காரணங்கால், 2026ம் ஆண்டில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

கருப்பு படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா இப்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் என டைட்டில் வைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால் படக்குழு தரப்பில் இன்னும் அறிவிக்கவில்லை. சூர்யா 46 படத்தில் நாயகியாக மமிதா பைஜூ நடிக்கிறார். லக்கி பாஸ்கர் சங்கராந்திவஸ்துனம் போன்ற ஹிட் படங்களை தந்தவர் இயக்குனர் வெங்கி அட்லூரி என்பது கவனிக்கத்தக்கது.

- Advertisement -

சூர்யா இந்த படத்துக்கு பிறகு அவர் நடிக்கப் போகும் 47வது படத்தை மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் டைரக்ட் செய்கிறார். இவர் பகத் ஃபாசில் நடித்த ஆவேசம் உள்ளிட்ட சில வெற்றிப் படங்களை இயக்கியவர். அடுத்ததாக சூர்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் நாயகியாக நடிகை நஸ்ரியாக நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இவர் நடிகர் பகத் ஃபாசில் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழில் நஸ்ரியா ராஜா ராணி நையாண்டி போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார். சூர்யா 47 படத்தில் நஸ்ரியாக நடிக்க காரணம், ஏற்கனவே சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த புறநானூறு படத்தில் நடிக்க கமிட் ஆனவர் நஸ்ரியா தான். அந்த படம் பிறகு சிவகார்த்திகேயன் நடித்ததால் நஸ்ரியா அதில் நடிக்கவில்லை. புறநானூறு படத்தில் நடிக்க அவர் ஏற்கனவே அட்வான்ஸ் வாங்கியிருந்த நிலையில், இப்போது இந்த படத்தில் சூர்யாவுடன் நடிக்க உள்ளதாக தகவல் வௌியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்