- Advertisement -
Homeபொழுதுபோக்குடிவிஸ்ட் மேல டிவிஸ்ட் வெச்சு இந்த படத்தை மொக்கை படமா மாத்திட்டாங்க, இயக்குனர் நல்ல வாய்ப்பை...

டிவிஸ்ட் மேல டிவிஸ்ட் வெச்சு இந்த படத்தை மொக்கை படமா மாத்திட்டாங்க, இயக்குனர் நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டார் – லீடர் படம் குறித்து விமர்சித்த பிரபலம்!

- Advertisement -

எதிர்நீச்சல் கருடன் காக்கிச்சட்டை பட்டாஸ் கொடி போன்ற படங்களை இயக்கியவர் துரை செந்தில்குமார். அவரது இயக்கத்தில் வெளியான படம் லீடர். இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள லெஜண்ட் அருள் சரவணன், இந்த படத்தை அவரே சொந்தமாக தயாித்திருக்கிறார். ஷாம் ஆண்ட்ரியா விடிவி கணேஷ் லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கடந்த 3ம் தேதி வெளியான லீடர் படம் குறித்து சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது, லீடர் படத்தின் கதை இதுதான். தூத்துக்குடியில் இருக்கும் துறைமுகத்தில் சமூக விரோத செயல்கள் நடப்பது அந்த பகுதியில் இன்ஸ்பெக்டராக இருக்கும் ஆண்ட்ரியாவுக்கு தெரிய வருகிறது.

- Advertisement -

ஆனால் அதை ஆதாரத்துடன் கண்டுபிடிக்க முடியாமல் ஆண்ட்ரியா தவிக்கிறார். இந்த நேரத்தில் தான் ஆண்ட்ரியாவின் அப்பா, அந்த துறைமுகத்தில் வில்லனுடன் நெருங்கி பழகும் ஒரு நபரால்தான் அங்கு என்ன நடக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியும் என்று ஐடியா சொல்கிறார். அப்போதுதான் படத்தின் ஹீரோ லெஜெண்ட் சரவணன் மனைவியை பறிகொடுத்து விட்டு குழந்தை பாசத்தை கொட்டி வளர்த்து வருகிறார்.

அவர் மெக்கானிக்கலாக இருப்பதால் தூத்துக்குடி ஹார்பரில் இருக்கும் கார்களை இவர் சரி செய்து கொடுக்கிறார். அதனால் வில்லனுடன் அவருக்கு நல்ல நட்பு ஏற்படுகிறது. இதை தெரிந்து கொண்ட ஆண்ட்ரியா லெஜண்ட் சரவணனை சந்தித்து, ஹார்பரில் இருக்கும் கண்டெய்னரில் ஒட்டு கேட்கும் மிஷினை வைக்க வேண்டும் என்று சொல்கிறார். ஆனால் அதற்கு லெஜண்ட் சரவணன் செய்ய முடியாது என்று மறுத்து விடுகிறார்.

- Advertisement -

ஆண்ட்ரியா மெக்கானிக்கை சந்தித்து பேசிய விஷயம் ஹார்பரில் இருக்கும் வில்லனுக்கு தெரிய வர, எதுக்காக இன்ஸ்பெக்டர் உன்னை சந்தித்தார்? என்ன பேசினார்? என்ன கேட்டார் என்று வில்லன் மிரட்டுகிறார். அப்போது லெஜெண்ட் சரவணன் உங்க வண்டியில ட்ராக்கிங் டிவைஸ் வைக்க சொன்னாங்க. நான் முடியாது என்று சொல்லிவிட்டேன் என்கிறார். இதை நம்பாத வில்லன் லெஜண்ட் சரவணன் மகளை கடத்தி வைத்துக்கொண்டு மிரட்டுகிறார். அதன் பின்பு என்ன ஆனது என்பதுதான் லீடர் படத்தின் கதை.

படத்தின் முதல் பாதி எந்தவித சேதாரம் இல்லாமல் நல்ல விறுவிறுப்பாக வேகமாக சென்றது. நாம் பயந்த அளவுக்கு படம் மோசமாக இல்லை. ஆனால் 2வது பகுதியில் சீனுக்கு சீன் ட்விஸ்ட் வைக்கிறேன்னு சொல்லி படத்தில் லட்சக்கணக்கான டிவிஸ்ட் வச்சிருப்பாங்க. அவை அனைத்தும் சுவாரசியமே இல்லாத மொக்கையான டிவிஸ்ட். முதல் படத்தை விட 2வது படத்தில் அண்ணாச்சி நன்றாக நடித்திருக்கிறார். பெரிய முன்னணி நடிகர் நடிக்க வேண்டிய கதையில் சரவணன் நடித்து நிறைய செலவு செய்திருக்கிறார். நல்ல வாய்ப்பு இருந்தும் இயக்குனர் மிஸ் செய்து விட்டார் என்று ப்ளு சட்டை மாறன் கூறியிருக்கிறார்

- Advertisement -

சற்று முன்