- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதுக்காக மட்டும் நான் கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன், அது எனக்கு வேணும்னா நிறைய வழிகள்...

அதுக்காக மட்டும் நான் கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன், அது எனக்கு வேணும்னா நிறைய வழிகள் இருக்கு – நடிகை நித்யாமேனன் போட்டாரே ஒரு போடு!

- Advertisement -

மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை நித்யாமேனன். கடந்த 2011ம் ஆண்டு வெளியான 180 என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு நித்யாமேனன் அறிமுகமானார். மலையாள சினிமாவில் இருந்து தமிழில் அறிமுகமான சில நடிகைகளில் ரசிகர்கள் மத்தியில் அழுத்தமான வரவேற்பை பெற்றவர்களில் இவரும் ஒருவர்.

தொடர்ந்து வெப்பம் மாலினி 22 பாளையங்கோட்டை ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை காஞ்சனா 2 ஓ காதல் கண்மணி சைக்கோ இருமுகன் மெர்சல் திருச்சிற்றம்பலம் இட்லி கடை தலைவன் தலைவி உள்ளிட்ட பல படங்களில் நித்யாமேனன் நடித்துள்ளார். இதில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த அவருக்கு சிறந்த நடிகை தேசிய விருதும் கிடைத்தது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் நித்யாமேனன் பேசியது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நடிகை நித்யா மேனன் பேசியதாவது, உங்களுக்கு குழந்தைகள் வேண்டும் என்பதற்காக மட்டும் நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

திருமணம் செய்து கொள்ளாமலேயே குழந்தைகளை பெற்றுக் கொள்ள முடியும் இதற்கான பல அறிவியல் முறைகள் உள்ளன. பலர் ஏற்கனவே இந்த வழியில் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். எனக்கு சுதந்திரம் மிகவும் முக்கியம். திருமணம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே. ஆனால் அதுவே வாழ்க்கை அல்ல.

- Advertisement -

எனக்கு உண்மையான காதல் கிடைத்தால் நான் நிச்சயமாக திருமணம் செய்து கொள்வேன். ஆனால் எனக்கு திருமணம் ஆகவில்லை என்பதற்காக வாழ்க்கை நின்று விடுவதில்லை என்று நடிகை நித்யாமேனன் கூறியிருக்கிறார். சமீபத்தில் தான் நடிகர் சத்யராஜ் மகள் திவ்யாவும் இப்படிப்பட்ட ஒரு கருத்தை கூறியிருந்தார். இப்போது நித்யாமேனனும் அதே விதமான கருத்தை தெரிவித்திருக்கிறார்.

நடிகை நித்யாமேனன் மட்டுமின்றி தமிழ் சினிமாவில் பல முக்கிய நடிகைகள் இன்னும் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக வலம் வருகின்றனர். உண்மையில் அவர்கள் திருமணம் செய்துக்கொள்ள மறுப்பதற்கு முக்கிய காரணம் திருமணத்துக்கு பிறகு நடிக்க முடியாது. அப்படியே நடித்தாலும் பெரிய அளவில் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்காது. அதனால்தான் சினிமா பயணத்தை தொடர திருமணத்தை தவிர்க்கின்றனர் என்று சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்