தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் எஸ் தாணு. பல முன்னணி நட்சத்திரங்களின் பல மாஸ் ஹிட் படங்களை தயாரித்தவர் என்ற பெருமை தயாரிப்பாளர் தாணுவுக்கு உண்டு. அன்று முதல் இன்று வரை தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக தயாரிப்பாளர் தாணு நல்ல படங்களை தயாரித்து ரசிகர்களுக்கு தந்து வருகிறார்.
ஒரு படம் குறைந்த பட்ஜெட்டில் தயாரித்து அந்த படம் மிகப் பெரிய அளவில் வசூல் சாதனை செய்தால் படத்தின் ஹீரோ இயக்குனர் மற்றும் படக் குழுவினருக்கு சம்பளத்தை இரண்டு மடங்காக தந்துவிடும் ஒரு தாராள குணம் கொண்டவர் தயாரிப்பாளர் தாணு என்று கோலிவுட் வட்டாரத்தில் கூறுகின்றனர். அந்தளவுக்கு கலைஞர்களுக்கு முக்கியத்துவம் தயாரிப்பாளராக அவர் இருக்கிறார்.
இந்நிலையில் வாடிவாசல் படத்தை இயக்குவதற்காக இயக்குனர் வெற்றிமாறனுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பெரிய தொகையை அட்வான்ஸ் ஆக தாணு தந்திருக்கிறார். அதன்பிறகு வெற்றிமாறன் கேட்கும் போதேல்லாம் 1 கோடி 2 கோடி ரூபாய் என தந்திருக்கிறார். ஏறக்குறைய அவருக்கு தர வேண்டிய சம்பளத்தையே தாணு ஏற்கனவே கொடுத்து விட்டார்.
இந்த சூழலில் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக வேண்டிய வாடிவாசல் படம் டிராப் ஆகி விட்டது. ஆனாலும் சூர்யா ஒரு படத்தில் தாணுவுக்கு நடிக்க வேண்டும். அதே போல் வெற்றிமாறன் ஒரு படத்தை தாணு தயாரிப்பில் இயக்க வேண்டும் என்று முடிவானது. அதன்படி பத்துதல தக்லைஃப் படங்களை தொடர்ந்து சிம்பு நடிக்கும் 49வது படத்தை தாணு தயாரிக்க வெற்றிமாறன் டைரக்ட் செய்வது என முடிவானது.
இந்த படத்துக்கு எஸ்டிஆர் 49 என தற்காலிக பெயர் வைக்கப்பட்டு 2 நாட்கள் பிரமோ ஷூட்டும் நடத்தப்பட்டது. இதில் இயக்குனர் நெல்சனும் கலந்துக்கொண்டார். அவரும் இந்த படத்தில் இயக்குனராக சில காட்சிகளில் வருவதாக கூறப்பட்டது. ஆனால் படத்தின் பட்ஜெட் ரூ. 150 கோடிக்கு மேல் எகிறியதால் தயாரிப்பாளர் தாணு திடீரென பின்வாங்கி விட்டார்.
நடிகர் சிம்புவும் இயக்குனர் வெற்றிமாறனும் கடைசியாக தோல்வி படங்களை தந்த நிலையில், இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் தயாரித்தால் பலத்த நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். ஆனாலும் இந்த படத்தை விட்டுவிட வெற்றிமாறனுக்கு விருப்பமில்லை. அதனால் அவரே இதை சொந்தமாக தயாரிக்க முடிவு செய்திருக்கிறார். ஏற்கனவே அவர் தயாரித்த மனுஷி பேட் கேர்ள் படங்கள் வெளியாகி பெரிய வசூலை தந்தால் எஸ்டிஆர் 49 படத்தை சிம்புவின் பங்களிப்புடன் வெற்றிமாறனே தயாரிக்க உள்ளார்.





