நடிகை நிவேதா பெத்துராஜ், ஒரு நாள் கூத்து படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தொடர்ந்து டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், பொதுவாக என் மனசு தங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். ஆனால் தமிழில் தொடர்ந்து அவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு வரவில்லை.
என்றாலும், நிவேதா பெத்துராஜ் மிக அழகாகவும், கவர்ச்சியான நடிகையாகவும் இருப்பதால் அவரை பற்றிய தகவல்கள் அவ்வப்போது வைரலாகி வருகின்றன. சமீபத்தில் தமிழகத்தை சேர்ந்த பிரபல அரசியல்வாதி ஒருவர், நிவேதா பெத்துராஜூக்கு துபாயில் சொந்தமாக ரூ. 50 கோடியில் பங்களா வாங்கிக் கொடுத்தாக ஒரு தகவல் பரவி வைரலானது.
ஆனால் அதுவெல்லாம் மிகப்பெரிய பொய், இந்த நிமிடம் வரை என்னுடைய சொந்த உழைப்பில்தான் வாழ்ந்து வருகிறேன். இப்போதும் துபாயில் வாடகை வீட்டில்தான் நான் வசித்து வருகிறேன், என நிவேதா பெத்துராஜ் வீடியோ வெளியிட்டு தெளிவுபடுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மீண்டும் ஒரு சர்ச்சையில் நடிகை நிவேதா பெத்துராஜ் சிக்கியிருக்கிறார். இப்போது அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, தெலங்கானா மாநிலம் ஐதரபாத்தில் காரில் நிவேதா பெத்துராஜ் சென்றிருக்கிறார். காரை அவரே ஓட்டிய நிலையில், காரில் வேறு யாரும் இல்லை.
அப்போது காரை மறித்து நிறுத்திய போலீசார், காரை ஓட்டி வந்த நிவேதா பெத்துராஜிடம், கார் டிக்கியை திறந்து காட்டுமாறு கூறுகின்றனர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த நிவேதா பெத்துராஜ், போலீசார் பலமுறை வலியுறுத்தியும் கார் டிக்கியை திறக்க மறுத்து விடுகிறார். மேலும், அப்போது அந்த சம்பவத்தை மொபைல் போன் கேமராவில் படம் பிடிப்பதை பார்த்து, கை வைத்து தடுக்கிறார்.
இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தேர்தல் நேரமாக இருப்பதால் போலீசார் டிக்கியை திறக்கச் சொன்ன நிலையில், நிவேதா பெத்துராஜ் டிக்கியை திறக்க மறுத்தது ஏன், என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே நேரத்தில் தெலுங்கில் நிவேதா பெத்துராஜ் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதில் இடம்பெற்ற காட்சியை தான் இப்படி வெளியிட்டு பிரமோ செய்கிறார்களோ, என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
https://x.com/sairaaj44/status/1795991445041508575





