- Advertisement -
Homeபொழுதுபோக்குரூ 500 கோடிக்கு பட்ஜெட்டை இழுத்து விட்ட இயக்குனர் ஷங்கர் - நிதி நெருக்கடியில் சிக்கித்...

ரூ 500 கோடிக்கு பட்ஜெட்டை இழுத்து விட்ட இயக்குனர் ஷங்கர் – நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த தயாரிப்பு நிறுவனம் – இந்தியன் தாத்தா கை கொடுப்பாரா?

- Advertisement -

கடந்த 1996ம் ஆண்டில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் இந்தியன். கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. லஞ்சம், ஊழல் செய்பவர்களை குத்திக் கொலை செய்யும் இந்தியன் தாத்தாவாக கமல் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

லைகா புரடக்சன்ஸ் தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருந்து, மெகா பட்ஜெட் படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. இந்த தயாரிப்பு நிறுவனத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் குமார் போன்ற மிகப்பெரிய ஹீரோக்கள் தான் நடித்து வருகின்றனர். சிறந்த கதை, ஹிட் படங்கள் தரும் இயக்குனர்கள், டாப் ஸ்டார் நடிகர்களை கொண்டு பிரம்மாண்ட பட்ஜெட்டில் லைகா தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து மெகா ஹிட் படங்களை தந்து வருகிறது.

- Advertisement -

இப்போது லைக்கா நிறுவனம் கைவசம் மொத்தம் நான்கு முக்கிய படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. இதில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தை மகிழ்திருமேனி டைரக்ட் செய்து வருகிறார். திரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த படத்தின் ஓடிடி உரிமை மட்டும் 150 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்து எம்பிரான் 2 என்ற அரசியல் கதை, பிரித்விராஜனின் லூசிபர் 2ம் பாகமாக வெளியாகிறது. மோகன்லால், மஞ்சு வாரியார், விவேக் ஓபராய் என முன்னணி நட்சத்திரங்கள் நடித்த இந்த படத்தின் 2ம் பாகத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. பான் இந்தியா மூவி உருவாகி வரும், லூசிபர் படத்தை காண ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

- Advertisement -

அடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தை, தசெ ஞானவேல் டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தை வருகிற தீபாவளி பண்டிகைக்கு வெளியிட லைக்கா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அடுத்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் உருவாகி வருகிறது. துவக்கத்தில் இருந்தே நிறைய பிரச்னைகளையும் தடைகளையும் சந்தித்த பிறகு தான் இந்தியன் 2 படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. வருகிற ஜூன் 13ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்துக்கு முதலில் திட்டமிட்ட பட்ஜெட் ரூ. 350 கோடியை, 500 கோடி வரை ஷங்கர் இழுத்து விட்டார். நிதி நெருக்கடியில் தவித்த லைக்கா நிறுவனம், இந்த படத்தை பெரிய அளவில் நம்பி இருக்கிறது. ஆனால் லஞ்சம், ஊழலை மையப்படுத்திய இந்த படத்தை, இன்றைய சூழலில் ரசிகர்கள் வரவேற்பார்களா என்பதுதான் கேள்விக் குறியாக இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்