கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான படம் முகமூடி. இந்த படத்தில் ஜீவா நாயகனாகவும் நரேன் வில்லனாகவும் நடித்திருந்தார். இந்த படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. ஆனால் இந்த படம் சரியாக போகவில்லை. அதனால் தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.
இந்நிலையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் மீண்டும் தமிழில் பூஜா ஹெக்டே நடித்தார். இந்த படம் விமர்சன ரீதியாக தோல்வி அடைந்தாலும் வசூல் ரீதியாக பெரிய வரவேற்பை பெற்றது. இதில் பூஜா ஹெக்டே நடிப்பு மற்றும் நடனம் ரசிகர்கள் மத்தியில் பெரிய பாராட்டை பெற்றது.
இதைத் தொடர்ந்து மீண்டும் விஜயுடன் ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வருகிறார். அத்துடன் காஞ்சனா 4 படத்தில் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் உடன் நடித்து வருகிறார். சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்திலும் நாயகி இவர்தான். மேலும் கூலி படத்திலும் ஒரு பாடல் காட்சியில் ரஜினியுடன் நடனம் ஆடியிருக்கிறார்.
இதுமட்டுமின்றி இன்னும் சில படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்படி தமிழில் தொடர்ந்து பல படங்களில் பூஜா ஹெக்டேவுக்கு வாய்ப்புகள் வர என்ன காரணம் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
நடிகை பூஜா ஹெக்டேவை பொருத்தவரை மற்ற நடிகைகள் போல படப்பிடிப்பு தளத்தில் அந்த வசதி வேண்டும் இந்த வசதி வேண்டும் என்றெல்லாம் கேட்பதில்லை. படப்பிடிப்பு தளங்களில் என்ன வசதி இருக்கிறதோ அதை மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார். சாதாரணமான கேரவன் வசதி செய்து கொடுத்தாலோ, ஸ்டார் ஹோட்டல் உணவு இல்லாமல் கையேந்தி பவன் உணவை கொடுத்தால் கூட மகிழ்ச்சியாக அவர் ஏற்றுக்கொள்கிறார்.
இதற்கு மேலாக 2 கதாநாயகி சப்ஜெக்ட் படங்களில் நடிக்கும் போது, தன்னைவிட இன்னொரு நடிகைக்கு அதிகமான காட்சிகள் இருந்தால் கூட அதைப்பற்றி அவர் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. எனக்கு 4 நல்ல சீன்கள் இருந்தாலே போதும். அதில் என் திறமையை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்து விடுவேன் என்று நம்பிக்கையாக இருக்கிறார் பூஜா ஹெக்டே. அதனால் தான் அவருக்கு அதிகளவில் தமிழில் பட வாய்ப்புகள் வருவதாக கூறப்படுகிறது.





