- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென வில்லனாக மாறிய நடிகர் சங்கத் தலைவர் நாசர், அதுவும் நடிகர் விஜய் சேதுபதிக்கா? -...

திடீரென வில்லனாக மாறிய நடிகர் சங்கத் தலைவர் நாசர், அதுவும் நடிகர் விஜய் சேதுபதிக்கா? – என்னய்யா நடக்குது இங்கே?

- Advertisement -

நடிகர் நாசர் தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட வேண்டிய ஒரு மிகச்சிறந்த நடிகர் என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த நடிகர் நாசருக்கு, தனது படங்களில் நடிகர் கமல்ஹாசன் அதிக முக்கியத்துவம் கொடுத்து நடிக்க வைத்தார். நாயகன் படத்தில் நடித்திருந்தார். குறிப்பாக மகளிர் மட்டும் படத்தில் நாசரின் விவகாரமான நடிப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து தேவர்மகன் படத்தில் மாயத்தேவன் கேரக்டரில் நாசரின் நடிப்பு மிரட்டலாக இருந்தது. தொடர்ந்து ரஜினி படங்களிலும் நாசர் நடித்தார். துவக்கத்தில் வில்லன் கேரக்டரில் நடித்த நாசர் அடுத்து குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் வந்த பாகுபலி படத்தில் கூட அவரது நடிப்பு மிக அழுத்தமாக இருந்தது, ரசிகர்களை கவர்ந்தது.

- Advertisement -

அதே நேரத்தில் அவதாரம், முகம் போன்ற படங்களிலும் நாசரின் தனித்துவமான நடிப்பை காண முடியும். பமபாய், எம்டன் மகன், அவ்வை சண்முகி, வசீகரா என தனது படங்களில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்துபவர் நாசர். ஆனால் எந்த கேரக்டராக இருந்தாலும், போகுற போக்கில் அசால்ட்டாக நடித்துவிட்டு போகும் அளவுக்கு அவரது நடிப்பு வேற லெவலில்தான் இருக்கும்.

சில கலைஞர்களுக்கு மட்டுமே எந்தவிதமான கேரக்டர் கொடுத்தாலும் அதை பிரதிபலிக்கிற மாதிரியான முகத்தோற்றம் அமையும். அந்த வகையில் குருதிப்புனல் படத்தில் கொடூர தீவிரவாதியாகவும் நாசர் மிரட்டுவார். அவ்வை சண்முகி சமையல்கார பாஷாவாகவும் ரசிகர்களை சிரிக்க வைப்பார். அப்படி ஒரு பன்முக தன்மை கொண்ட கலைஞர்தான் நாசர்.

- Advertisement -

ஆனால் சமீபமாக நாசர் நடித்த படங்கள் வெகுவாக குறைந்து போய்விட்டன. குறிப்பாக பாகுபலி படத்துக்கு பிறகு தமிழில் நாசர் நடித்த படங்கள் அவ்வளவாக வெளிவந்ததாக தெரியவில்லை. நடிகர் சங்கத் தலைவரான பிறகு படங்களில் நடிப்பை வெகுவாக அவரே குறைத்துக்கொண்டாரா என்ற கேள்வியும் எழுகிறது. ரஜினி, கமல், விஜய், அஜீத் என முன்னணி நடிகர்கள் படங்களில் கூட அவரை காண முடிவதில்லை.

இந்நிலையில் நடிகர் நாசர் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார். இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் டிரெயின் படத்தில், வில்லன் கேரக்டரில் நடிக்க நாசர் கமிட் ஆகி நடித்து வருகிறார். மிஷ்கின் படத்தின் வில்லன் என்றாலே, விவகாரமாக தான் இருக்கும். சைக்கோ தனமான வில்லனாக தான் இருப்பார். அதுமாதிரியான ஒரு கேரக்டரில் நாசர் நடித்தால், நிச்சயம் டிரெயின் படம் வேற லெவலில்தான் இருக்கும் என்று இப்போதே ரசிகர்களின் மத்தியில் ஆர்வம் அதிகரித்துவிட்டது.

- Advertisement -

சற்று முன்