- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் ஒரு மாஸ் படத்தில் நடிக்க கமிட் ஆன காந்தாரா பட நாயகன் ரிஷப் ஷெட்டி...

மீண்டும் ஒரு மாஸ் படத்தில் நடிக்க கமிட் ஆன காந்தாரா பட நாயகன் ரிஷப் ஷெட்டி – 2ம் பாகமாக உருவாகும் இந்த படத்திலும் வேற லெவல் சம்பவம் காத்திருக்குது!

- Advertisement -

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த காந்தாரா படம் மூலம் இந்திய சினிமா ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனம் பெற்றவர் நடிகர் ரிஷப் சிட்டி. இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகர் தேசிய விருதும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது காந்தாரா படத்தின் 2ம் பாகம் அவரது நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இந்நிலையில் பான் இந்தியா பிளாக்பஸ்டர் படமாக வெற்றி பெற்ற ஹனுமன் படத்தை தொடர்ந்து, இந்த படத்தின் தொடர்ச்சியாக ஜெய் ஹனுமன் என்ற படம் உருவாகிறது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. ஹனுமன் படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் வர்மா 2ம் பாகத்தையும் இயக்குகிறார். இந்த படத்தில் ஹீரோவாக ரிசப் ஷெட்டி நடிக்கிறார்.

- Advertisement -

சமகால கதைகளை புராணங்களுடன் கலந்து சொல்லும் புதுமையான அணுகுமுறைக்காக இயக்குனர் பிரசாந்த் வர்மா படங்கள் வெற்றி பெறுகின்றன. காந்தாரா படம் தந்த வெற்றி மூலம் நடிகர் ரிஷப்ஷெட்டி நாடு முழுவதும் பிரபலமான ஒரு நடிகராக கொண்டாடப்படுகிறார். இப்போது ஜெய் ஹனுமான் படத்திலும் அவர் ஹீரோவாக நடிப்பது ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

சமீபத்தில் ரிஷப்ஷெட்டி ஹனுமனாக நடிக்கிறார் என்ற தகவலுடன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது. சக்தி வாய்ந்த தோரணையில் இந்த போஸ்டரில் காணப்பட்ட ரிசப்ஷெட்டி தனது கையில் ஸ்ரீ ராமரின் சிலையை பயபக்தியுடன் பிடித்திருக்கிறார். இந்த போஸ்டரில் ரிஷப்ஷெட்டியின் கட்டுமஸ்தான உடலை மட்டும் காட்டாமல், ஹனுமானுடன் தொடர்புடைய ஆழ்ந்த பக்தியையும் வலிமையும் பிரதிபலிப்பதாக இருந்தது. ஹனுமனை அவர் திரையில் எவ்வாறு உயிர்ப்பிக்க இருக்கிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலாக உள்ளனர்.

- Advertisement -

இயக்குனர் பிரசாந்த் வர்மா இந்த படத்தின் கதையை திரையில் மிகப் பிரமாண்டமாக காட்ட இருக்கிறார் என்பதை இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அதிரடி ஆக்சன் மற்றும் புராண காவியமாக இந்த படம் உருவாகிறது.

கடந்தாண்டில் வெளிவந்த ஹனுமன் படத்தின் தொடர்ச்சியாக இப்போது ஜெய் ஹனுமான் படம் வெளியாகிறது. கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி தமிழ்,இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் ஹனுமன் படம் வெளியானது. பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் அம்ரிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார், ரவிதேஜா, வினய், தீபக்ராஜ் ஷெட்டி, வெண்ணிலா கிஷோர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக ஜெய் ஹனுமன் படம் ரிஷப் ஷெட்டி நடிப்பில் உருவாகிறது.

- Advertisement -

சற்று முன்