- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை பிரியா பவானி சங்கருக்கு மிக விரைவில் டும்டும்டும் - மாப்பிள்ளை யார் தெரியுமா? -...

நடிகை பிரியா பவானி சங்கருக்கு மிக விரைவில் டும்டும்டும் – மாப்பிள்ளை யார் தெரியுமா? – அப்போ இனிமே சினிமாவில் நடிக்க மாட்டாங்களா?

- Advertisement -

ஆரம்பத்தில் டிவி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் பிரியா பவானி சங்கர். அவரது வசீகரமான முகத்தோற்றமும் அழகும் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை உருவாக்கி தந்தது. மேயாத மான் படத்தில் அறிமுகமான அவர் யானை கடைக்குட்டி சிங்கம் டிமாண்டி காலனி 2 ருத்ரன் பிளாக் பத்துதல அகிலன் ரத்னம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

இதில் டிமாண்டி காலனி 2 படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில் மிகவும் திரில்லர் காட்சிகளில் அவர் மிக சிறப்பாக நடித்திருந்தார். அதுவரை அவர் நடித்த சில படங்கள் சரியாக போகாத நிலையில் ராசியில்லாத நடிகை என்று கூறப்பட்டார். டிமாண்டி காலனி 2 வெற்றிக்கு பிறகு அவர் மீதான அந்த விமர்சனம் தவிடு பொடியானது.

- Advertisement -

சென்னையில் சொந்தமாக ஓட்டல் ஒன்றை நடத்தி வரும் நடிகை பிரியா பவானி சங்கர் அவ்வப்போது தனது காதலர் மற்றும் நண்பர்களுடன் எடுக்கும் புகைப்படங்கள் வீடியோக்களை தனது வலைதள பக்கங்களில் ரசிகர்களுக்கு பகிர்ந்து வருகிறார். மேலும் ஆஸ்திரேலியாவில் உள்ள தனது நீண்ட கால காதலரை சந்திக்க செல்லும் அவர் மாதக்கணக்கில் அங்கு தங்கி விடுகிறார்.

இந்த சூழலில் நடிகை பிரியா பவானி சங்கருக்கு இந்த ஆண்டில் திருமணம் என்ற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் சில மாதங்களில் அவரது திருமணம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்போது மரகதநாணயம் 2 படத்தில் அவர் நடித்து வருகிறார். மேலும் அவர் நடித்த இந்தியன் 3 படம் இன்னும் திரைக்கு வரவில்லை.

- Advertisement -

இதற்கிடையே டிமாண்டி காலனி 3 படத்தில் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள நிலையில் அந்த படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. ஆனால் இந்த படங்களை தொடர்ந்து வேறு எந்த படங்களிலும் அவர் நடிப்பதாக தகவல் இல்லை. தனது திருமணம் காரணமாக அவர் படங்களில் கமிட் ஆவதை தவிர்த்தாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

நடிகை பிரியா பவானி சங்கரின் நீண்ட கால காதலரை தான் அவர் கரம்பிடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் திருமணத்துக்கு பிறகு அவர் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பாரா, அல்லது ஆஸ்திரேலியாவில் சென்று நிரந்தரமாக தங்கி விடுவாரா, அங்கு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகி விடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனினும் பிரியா பவானி ஷங்கர் திருமணத்துக்கு பின் நடிக்காமல் போய் விடுவாரா என அவரது ரசிகர்கள் ஏக்கமாக புலம்புகின்றனர்.

- Advertisement -

சற்று முன்