- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமா நடிகைகள் யாருமே செய்யாத ஒரு விஷயத்தை செய்து காட்டிய நடிகை பிரியாமணி -...

தமிழ் சினிமா நடிகைகள் யாருமே செய்யாத ஒரு விஷயத்தை செய்து காட்டிய நடிகை பிரியாமணி – மகாதேவன் பத்தி நீங்களும் கொஞ்சம் தெரிஞ்சுக்குங்க!

- Advertisement -

நடிகை பிரியாமணி, தமிழ் சினிமாவில் மிக முக்கியமான முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். கண்களால் கதை செய் என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமான பிரியாமணி தொடர்ந்து பல படங்களில் நடித்தார். நல்ல கேரக்டர்களில் நடித்ததால், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

கடந்த 2007ம் ஆண்டில் இயக்குனர் அமீர் இயக்கத்தில் பிரியாமணி முத்தழகு கேரக்டரில் நடித்த பருத்தி வீரம் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதில் நடிகர் கார்த்தி, அறிமுகமானார். இதில் பிரியாமணி நடிப்பு வேற லெவலில் இருந்தது. குறிப்பாக படத்தின் இறுதிக்கட்ட காட்சியில் அவரது வேற லெவல் நடிப்பு ரசிகர்களை நிலைகுலைய செய்தது. இதற்காக நடிகை பிரியாமணி சிறந்த நடிகையாக தேசிய விருது பெற்றார்.

தொடர்ந்து தோட்டா, சாருலதா, நினைத்தாலே இனிக்கும், மலைக்கோட்டை, ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரியாமணி தெலுங்கு, மலையாளத்தில் அதிக படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்தியில் அட்லி இயக்கிய ஜவான் படத்தில், பிரியாமணி நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து, இந்தி படங்களில் நடிக்கவும் பிரியாமணிக்கு நிறைய வாய்ப்புகள் வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழ் சினிமா நடிகைகள் யாரும் செய்யாத ஒரு சூப்பரான விஷயத்தை நடிகை பிரியாமணி செய்திருக்கிறார். அதாவது, கோவில்களில் யானைகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் விதமாக, இயந்திர யானைகளை கோவில்களில் இருக்கும் வகையில் ஒரு திட்டத்தை பீட்டா அமைப்பு செய்து வருகிறது. இதன் மூலம் கோவில்களில், யானைகளுக்கு பதிலாக, இயந்திர யானைகள் இருக்கும்.

கேரளாவில் கொச்சி அருகே உள்ள திருக்கயில் மகாதேவா கோவிலுக்கு ஒரு இயந்திர யானையை, நடிகை பிரியாமணியும் பீட்டா அமைப்பும் சேர்ந்து வழங்கி உள்ளனர். பீட்டா அமைப்புடன் சேர்ந்து கோவிலுக்கு இயந்திய யானை வழங்கியது மகிழ்ச்சியளிப்பதாக பிரியாமணி கூறியிருக்கிறார். கோவிலுக்கு நன்கொடையாக வழங்கிய அந்த யானைக்கு மகாதேவன் எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

வழக்கமாக சினிமா நடிகைகள் கோவிலுக்கு சென்றால், அர்ச்சனை காணிக்கை தருவார்கள். ரஜினி போன்றவர்கள் எடைக்கு எடை பணக்கட்டுகளை தந்து, நேர்த்திக்கடன் செய்வார்கள். ஆனால் பிரியாமணி, யாரும் யோசிக்காத ஒரு செயலாக, பீட்டா அமைப்புடன் சேர்ந்து இயந்திர யானையை கோவிலுக்கு வழங்கி இருப்பது, பலரது பாராட்டை பெற்று வருகிறது. இது யானைகளின் நலன் காக்கும் ஒரு நடவடிக்கையாகவும் இருப்பது இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை தந்துள்ளது.

சற்று முன்