நடிகர் விஜய் இப்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 69வது படம். எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் இது என்பதும் நடிகர் விஜய்க்கு இது கடைசி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்துக்கு பிறகு இனி சினிமாவில் நடிக்கப் போவது இல்லை என்று ஏற்கனவே நடிகர் விஜய் அறிவித்து விட்டார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஏற்கனவே பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் கௌதம் மேனன் பிரகாஷ் ராஜ் நரேன் பிரியாமணி அபிராமி பாபி தியோல் ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
தமிழில் அவ்வப்போது மட்டுமே நடிகை பிரியாமணி நடித்து வருகிறார். இயக்குனர் பாரதிராஜாவின் கண்களால் கைது செய் படம் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியாமணி. அவருக்கு அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி அறிமுகமான பருத்தி வீரன் படம் சிறந்த நடிகை தேசிய விருதை கடந்த 2007ம் ஆண்டில் பெற்றுத் தந்தது.
அமீர் இயக்கத்தில் பருத்தி வீரன் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக முத்தழகு என்ற கேரக்டரில் பிரியாமணி நடித்திருந்தார் என்பதை விட வாழ்ந்திருந்தார் என்றே சொல்லலாம். அதன்பிறகு இன்று வரை பல படங்களில் பிரியாமணிக்கு பருத்திவீரன் முத்தழகு கேரக்டர்தான் பெயர் சொல்லும் முக்கிய அடையாளமாக இருந்த வருகிறது.
நடிகை பிரியாமணி தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் அவர் நடித்த மலைக்கோட்டை நினைத்தாலே இனிக்கும் சாருலதா அது ஒரு கனாக்காலம் தோட்டா ராவணன் போன்ற படங்களில் பிரியாமணி நடிப்பு அழுத்தமாக, ரசிகர்களை கவரும் விதமாக இருந்தது.
இப்போது ஜனநாயகன் படத்தில் விஜயுடன் நடித்து வருவது குறித்து நடிகை பிரியாமணி கூறியதாவது, நான் நடிகர் விஜயின் தீவிர ரசிகை. அவருடன் நான் நடிக்கும் படப்பிடிப்பு காட்சிகள் ஆரம்பமாகி விட்டன. நானும் அவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் விரைவில் நடக்க உள்ளன. அவருடன் நடிக்கும் அந்த சந்தர்ப்பங்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன், என்று நடிகை பிரியாமணி கூறியிருக்கிறார்.





