- Advertisement -
Homeபொழுதுபோக்குபாடகி சின்மயி தமிழ் சினிமாவில் பாடக்கூடாது என்று தடை போட்டது நானா? - ஓபன் ஸ்டேட்மென்ட்...

பாடகி சின்மயி தமிழ் சினிமாவில் பாடக்கூடாது என்று தடை போட்டது நானா? – ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்த நடிகர் ராதாரவி!

- Advertisement -

சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த தக்லைஃப் படம் வெளியானது. அதற்கு 2 வாரங்களுக்கு முன்பாக தக்லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடந்தது. இந்த படத்தில் பாடகி தீ பாடிய முத்தமழை என்ற பாடலை, விழா மேடையில் பாடகி சின்மயி பாடினார்.

பாடகி தீ நிகழ்ச்சிக்கு வராததால் அன்று சின்மயி பாடிய முத்தமழை பாடல் பெரிய அளவில் வைரலானது. அந்த பாடல் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. அதே நேரத்தில் 6 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பாடகி சின்மயி பாடல்கள் பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டப்பிங் கலைஞரான அவர் நாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுக்கவும் அனுமதி மறுத்து ரெட்கார்டு போடப்பட்டுள்ளது.

- Advertisement -

இதற்கு காரணம் பாடகி சின்மயி, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் மீ டூ பெரிய அளவில் வரவேற்பை பெற்ற போது, கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார். இது கோலிவுட் வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த பிரச்னையின் பின்னணியில்தான் சின்மயி பாடவும் டப்பிங் பேசவும் தமிழ் சினிமாவில் ரெட் கார்டு போட்டு தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் முத்தமழை பாடலை கேட்ட ரசிகர்கள், சின்மயி திறமையான பாடகி. என்ன காரணம் இருந்தாலும் அவரை மீண்டும் தமிழ் சினிமாவில் பாடவும் டப்பிங் பேசவும் அனுமதிக்க வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியில் வலுவான கோரிக்கை எழுந்துள்ளது. இந்த சூழலில் அப்போதைய நடிகர் சங்கத் தலைவர் ராதாரவிதான் சின்மயிக்கு பாட தடை விதித்தாக ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.

- Advertisement -

இதுகுறித்து சமீபத்தில் பேசிய நடிகர் ராதாரவி கூறியதாவது, சின்மயி பாட்டு பாட நான் தடை போட்டதாக பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மை கிடையாது. நான் அப்போது டப்பிங் யூனியனுக்கு தான் தலைவராக இருந்தேன். ஆனால் அவர் பாடுவதற்கு தடை விதித்தது மியூசியன் யூனியன் இருந்துதான்.

மியூசிக் யூனியனுக்கும் டப்பிங் யூனியனுக்கும் சம்பந்தம் கிடையாது. 200 யூனியன் இருக்கும் இடத்தில் டப்பிங் யூனியன் வேறு, மியூசிக் யூனியன் வேறு. இது தெரியாதவர்கள் ஏதோ பேசிக்கொண்டு போகிறார்கள். எல்லாம் இஷ்டத்துக்கு ஏதோ பேசுகிறார்கள். நான் என்ன இதில் சொல்ல முடியும் என்று நடிகர் ராதாரவி ஆதங்கமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்