அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமான படம் டிசி. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்த படம் வெளியான நிலையில் திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் டிசி படம் குறித்து விமர்சித்து தாறுமாறாக பேசியிருக்கிறார்.
வீடியோ ஒன்றில் ப்ளு சட்டை மாறன் கூறியிருப்பதாவது, அருண் மாதேஸ்வரன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஹீரோ. இவர்கள் இருவரும் சேர்ந்து என்ன படம் எடுத்து விட போகிறார்கள்? இவர்களுக்கு தேவையான பொருட்கள் என்ன என்பதை தான் முதலில் கேட்க வேண்டும். தேவையான பொருட்கள் என்றால் டாடா சால்ட் 10 மூட்டை. அதை ஹெராயின் அல்லது கொகைன் என்று போதை பொருளாக காட்டிக் கொள்ளலாம்.
ஆயுதம் என்றால் துருப்பிடித்த கத்தி கோடாரி ஸ்க்ரு டிரைவர் எல்லாம் ஒரு ஐட்டம். போலீசில் இல்லாத துப்பாக்கி எல்லாம் வைத்திருப்பார்கள். அழுக்கு படிந்த பாழடைந்த கட்டடங்கள் பழைய அம்பாசிடர் கார் ஒரு வேன் புழுதி பறக்கும் சாலை இதையெல்லாம் தாண்டி காட்டினால் தூசி பறக்கும் அளவுக்கு 10 பேர் இவர்களை வைத்து படம் எடுக்க வேண்டும்.
ஜாடிக்கேத்த மூடி என்ற புரிதலில் அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை எடுத்திருக்கிறார். நீ எடுத்தாலும் அப்படிதான் எடுக்க போறே, நான் எடுத்தாலும் அப்படிதான் நடிக்க போறே என்கிற புரிதலில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த கதை ஒரு பையனை இங்கிலீஷ் மீடியத்தில் சேர்க்க வேண்டும் என்று ஆரம்பித்த கதையில் ஹீரோ காதல் செய்ய போய்விடுகிறார். அந்த பெண்ணையும் போட்டு தள்ளி விடுகிறார்கள்.
அதற்கு பிறகு அந்த பையனை படிக்க வைப்பார் என்று பார்த்தால் ரெட் லைட் ஏரியாவுக்கு ஹீரோ போகிறார். அங்கே ஒரு பெண் இவருடைய அழகில் மயங்கி விடுகிறார். அதற்கு பிறகு வேறு வேலையை பார்க்க சென்று விடுகிறார். இடையில் யார் வந்தாலும் கொலை செய்கிறார். அந்த பையனை படிக்க வைப்பார் என்று நினைக்கிறீர்களா என்றால் அதுவும் இல்லை. அப்பப்போ போலீசில் சிக்கினாலும் ஹீரோ வந்து விடுவார். அது எப்படி என்றே தெரியவில்லை.
படத்தில் அனிருத் இசை அருமையாக உள்ளது. வெளியில் இருந்து கேட்டால் சங்கராபரணம் சலங்கை ஒலி படம் போல கேட்கிறது. இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் எங்கே நடித்தார்? முகம் முழுவதும் முடியை வைத்துக்கொண்டு புதரில் இருந்து எட்டிப் பார்ப்பது போல் இருக்கிறார். ஜென்ஸி கிட்ஸ்க்கு இந்த படம் பிடிக்கும் என்று சொல்கிறார்கள். அவர்களை இவர்கள் முட்டாள் என்றே நினைத்து விட்டார்கள் போல. நீங்களும் முட்டாள் ஜென்ஸியாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் என்று ப்ளு சட்டை மாறன் விமர்சித்திருக்கிறார்.





