- Advertisement -
சமீபத்தில் நடிகை ராதிகா ஆப்தே ஒரு நேர்காணலில் கூறியதாவது, ஆலியா பட் அல்லது தீபிகா படுகோனே போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்தால் தவிர பாக்ஸ் ஆஃபிஸில் பெண்ணை மையப்படுத்திய கதைகள் திரையரங்குகளுக்கு பார்வையாளர்களை ஈர்ப்பது கடினமாக உள்ளது. நான் நடிக்கும் படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறதா அல்லது ஓடிடி தளங்களில் வெளியாகிறதா என்பதை கருத்தில் கொண்டு படங்களை தேர்ந்தெடுப்பதில்லை. எனது படங்கள் ஏதேனும் ஒரு வழியில் பார்வையாளர்களை சென்றடைய வேண்டும் என்றே விரும்புகிறேன். நான் நடிக்கும் ஒரு படம் மிகச் சிறப்பாக இருந்தாலும் கூட வணிக ரீதியாக வெற்றி பெற போராட வேண்டியிருக்கிறது. திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற பெண் நடிகைகளுக்கு பெரும்பாலும் முன்னணி ஆண் நட்சத்திரங்களின் துணை தேவைப்படுகிறது என்று ராதிகா ஆப்தே வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





