- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை ரோஜா - இயக்குனர் ஆர்கே செல்வமணி இடையே சண்டை மூட்டி விட்ட பிரபலம்… அவரையே...

நடிகை ரோஜா – இயக்குனர் ஆர்கே செல்வமணி இடையே சண்டை மூட்டி விட்ட பிரபலம்… அவரையே கல்யாணம் பண்ணிக்குங்க என காதலை பிரேக்கப் செய்த ரோஜா!

- Advertisement -

இயக்குனர் ஆர் கே செல்வமணி இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் நடித்த படம் செம்பருத்தி. இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. முதல் படத்திலேயே தனது அழகால் நடிப்பால் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நடிகை ரோஜா தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

அந்த 1990 காலகட்டத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு கார்த்திக் முரளி பிரபுதேவா என பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்த நடிகை ரோஜா முன்னணி நட்சத்திர நடிகையாக மாறினார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் பல படங்களில் நடிகை ரோஜா நடித்திருக்கிறார். இதற்கிடையே இயக்குனர் ஆர்கே செல்வமணியை நடிகை ரோஜா காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் ஆந்திராவில் குடும்பத்துடன் செட்டிலான நடிகை ரோஜா கடந்த பல ஆண்டுகளாக சினிமாவில் ஆர்வமின்றி அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வந்தார். சினிமாவில் அவ்வப்போது மட்டுமே சில படங்களில் நடித்து வந்தார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியின் போது நடிகை ராஜா ரோஜா ரோஜா சுற்றுலா மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆந்திராவில் ஆட்சி மாற்றம் நடந்த நிலையில் நடிகை ரோஜா இப்போது மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி தருகிறார். தமிழில் அவர் சில படங்களில் தற்போது நடித்து வருகிறார். நடிகை ரோஜாவும் இயக்குனர் ஆர்கே செல்வமணியும் ஆரம்பத்தில் காதலித்த காலகட்டத்தில் ஒருமுறை அவர்கள் காதலில் பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் காதலை பிரேக்கப் செய்யும் ஒரு மனநிலைக்கே ரோஜா போய்விட்டார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இயக்குனர் ஆர் கே செல்வமணி இயக்குனர் பாரதிராஜாவுடன் அப்போது நெருங்கிய நட்பில் இருந்திருக்கிறார். ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பாரதிராஜாவுடனே அவர் பயணித்துள்ளார். பாரதிராஜாவுடன் எப்போதும் இருப்பது அவரது அலுவலகத்திலேயே படுத்து தூங்குவது என்று ஆர்கே செல்வமணி இருந்துள்ளார். ஒருநாள் கூட ஆர் கே செல்வமணி வரவில்லை என்றால் அன்று இரவே போன் செய்து பாரதிராஜா கேட்கும் அளவுக்கு இருவருக்கும் நெருக்கமான நட்பு இருந்தது.

இதனால் செல்வமணியை காதலித்த நடிகை ரோஜா பயங்கர அப்செட் ஆகி இருக்கிறார். நீ பாரதிராஜாவையே கல்யாணம் செய்து கொள் என்று சொல்லி காதலை பிரேக்கப் செய்திருக்கிறார். இருவருக்கும் இடையே 6 மாதங்கள் பேச்சுவார்த்தையே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த இயக்குனர் பாரதிராஜா ரோஜாவை அழைத்து பேசி இருவரையும் சமாதானம் செய்துள்ளார். அப்போது நடிகை ரோஜாவை திருமணத்திற்கும் சம்மதிக்க வைத்துள்ளார். இந்த ஆச்சரியத் தகவல் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்