- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் அப்படி நடந்துக்கொண்டது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை, நடிகை ரோஜா சொன்ன அந்த ஒரு விஷயம்...

விஜய் அப்படி நடந்துக்கொண்டது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை, நடிகை ரோஜா சொன்ன அந்த ஒரு விஷயம் – தளபதி மீது இப்படி ஒரு விமர்சனமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் 1990களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ரோஜா. இவர் ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், அர்ஜுன், முரளி, சரத்குமார் என அப்போதைய முன்னணி நடிகர்களாக இருந்த ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தவர். நல்ல நடிப்பாற்றல், சிறந்த நடன திறமை நிறைந்த ரோஜா, அழகான நடிகையாகவும் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த ரோஜா, ஒரு கட்டத்துக்கு பிறகு சினிமாவில் மார்க்கெட் சரிய துவங்கியதால், தனது சொந்த மாநிலமான ஆந்திரா பக்கம் சென்று, அரசியலில் ஆர்வம் காட்டினார். ஆந்திரா அரசியலில் முதலில் சந்திரபாபு நாயுடு கட்சியில் இணைந்த ரோஜா, அதன் பிறகு ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மாறினார். ஆந்திரா சட்டசபை தேர்தலில் இரண்டு முறை நகரி தொகுதியில் வெற்றி பெற்ற ரோஜா. கடந்த ஆட்சிக் காலத்தில் விளையாட்டு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்தார்.

- Advertisement -

ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த ஆந்திரா சட்டசபை தேர்தலில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்து மூன்றாமிடம் சென்றது. இதனால் நடிகை ரோஜா கடும் விரக்தியில் இருந்து வருகிறார். இதற்கிடையே ஆந்திரா அரசியலில் இருந்து நடிகை ரோஜா விலகி, விஜய் துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைவதாக ஒரு தகவல் பரவியது. இதை நடிகை ரோஜா கடுமையாக மறுத்திருந்தார்.

அதே நேரத்தில் நடிகர் விஜய் குறித்து அவர் பேசிய சில கருத்துக்கள் இப்போது வைரலாகி வருகிறது. அதாவது விஜய் பெரிய நடிகராக இருந்தாலும் அவரின் சில குணங்கள் மற்றவருக்கு பிடிக்காது என்று கூறப்படுகிறது. குறிப்பாக சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விட்டால் யாரிடமும் பேசவே மாட்டார். படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததும் நேராக கேரவனுக்கு சென்று விடுவார்.

- Advertisement -

இயக்குனர் அழைக்கும் போது மட்டும் கேரவனிலிருந்து இறங்கி வருவார். அந்த காட்சியில் நடித்து முடித்துவிட்டு மீண்டும் கேரவனுக்குள் சென்று அமர்ந்து கொள்வார். மாலை 6 மணி ஆகிவிட்டால் வீட்டுக்கு கிளம்பி சென்று விடுவார். இதுதான் விஜயின் நடவடிக்கையாக உள்ளது. இயக்குனர் மற்றும் சக நடிகர்களிடம் கூட அதிகம் பேச மாட்டார். துவக்கத்தில் இது பலருக்கும் பிடிக்காத நிலையில், ஒரு கட்டத்தில் விஜய் என்றால் அப்படித்தான் இருப்பார் என்று எல்லோருமே அதை ஏற்றுக் கொண்டு விட்டனர்.

விஜயுடன் நடிக்க ஆசைப்படும் சில நடிகர்கள் கூட படப்பிடிப்பு தளத்தில் விஜய் இப்படி அலட்சியப்படுத்துவது குறித்து வருத்தம் தெரிவித்திருக்கின்றனர். இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் நடித்த நெஞ்சினிலே படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடிகை ரோஜா நடனமாடி இருப்பார். அப்போது இது குறித்து பேசிய நடிகை ரோஜா, அந்த பாடல் ஷூட்டிங் நடந்த போது விஜய் ஒரு வார்த்தை கூட என்னிடம் பேசவில்லை. ஏண்டா இந்த பாடலில் நடிக்க ஒத்துக் கொண்டோம் என்று எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது என்று சொல்லி வருத்தப்பட்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்