- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் ஜெயிச்சது வெறும் லக் தான், அவர் தோத்துப் போயிருந்தா அரசியல் என்னான்னு தெரிஞ்சிருக்கும் -...

விஜய் ஜெயிச்சது வெறும் லக் தான், அவர் தோத்துப் போயிருந்தா அரசியல் என்னான்னு தெரிஞ்சிருக்கும் – விளாசித் தள்ளிய நடிகை ரோஜா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் அழகான நாயகியாக ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர் நடிகை ரோஜா. ஆனால் நடிப்பு திறன் மட்டுமின்றி ஒரு அரசியல்வாதியாக ரோஜாவுக்கு மிகவும் அழுத்தமான கருத்துகளை நேர்த்தியாக பேசவும் தெரிந்திருக்கிறது. யாரும் மறுக்க முடியாத உண்மைகளை அவர் புட்டு புட்டு தனது அரசியல் கருத்துகளாக வைக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை ரோஜா, நடிகர் விஜய் முதல்வரானது குறித்து தனது கருத்துகளை வெளிப்படையாக பேசி மக்களை சிந்திக்க வைத்திருக்கிறார். அதில் நடிகை ரோஜா கூறியதாவது, விஜய் ஜெயிச்சு முதல்வர் ஆனது லக் மட்டுமே காரணம். விஜய் தேர்தலில் ஜெயிச்சது வெறும் லக் தான்.

- Advertisement -

உண்மையில் அவர் தோத்து போயிருந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் கட்சி நடத்தவே அவர் போராடியிருப்பார். பெரிய பெரிய இடையூறுகளை தடைகளை சந்தித்து இருப்பார். அப்போது தன்னுடன் இருப்பவர் யார், விலகி ஓடுபவர் யார் என்பதெல்லாம் அவருக்கு தெரிஞ்சுருக்கும். ஒரு கட்சியை காப்பாற்ற வழிநடத்த என்னென்ன கஷ்டங்களை சந்திக்க வேண்டும் என்பதும் தெரிஞ்சுருக்கும்.

சினிமாவில் வில்லனை அழித்து விட்டு மக்களை காப்பாத்துகிற ஹீரோவாக விஜயை பார்த்துவிட்டு நிஜத்திலும் அப்படி ஹீரோவாக இருப்பார் என்ற இமேஜனேசனில் மக்கள் ஓட்டுப் போட்டு விட்டனர். ஆனால் சினிமா வேறு அரசியல் வேறு என்பதை இந்த 5 ஆண்டுகளில் மக்கள் புரிந்துக்கொள்வார்கள். அதே போல் விஜயும் அரசியல் சினிமாவுக்கு இடையில் உள்ள வித்யாசத்தை புரிந்துக்கொள்ளார். மக்களுக்கு நல்லது செய்தால் மட்டுமே அவரை ஆட்சியில் தொடர வைப்பார்கள்.

- Advertisement -

தமிழ்நாடு முழுவதும் மக்களை போய் நேரடியாக சந்தித்து அவர்களது நிறை குறைகளை விஜய் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் பிரசாரத்துக்கே பாதி தமிழ்நாட்டுக்கு போகவில்லை. மக்களின் பிரச்னைகள் என்ன, அதை எப்படி சரிசெய்வது என்பதெல்லாம் நேரில் போய் பார்க்க வேண்டும். மக்களின் குறைகளை நேரடியாக பார்த்து தீர்க்க வேண்டும்.

தமிழ்நாட்டை போல கேரளா கர்நாடகா ஆந்திரா என பல இடங்களில் தவெக கட்சியை துவங்கலாம். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் இப்படி ஒரு சூழல் வந்த போது, ஒரு இடத்தில் அரசியல் செய்து நாம் நிலைத்தால் போதும். பல இடங்களில் கட்சியை கொண்டு போனால் ஒன்றுமில்லாமல் போய்விடும் என்றார். அதனால் தவெகவை மற்ற மாநிலங்களுக்கு கொண்டு சென்று ஒன்றுமில்லாமல் செய்துவிடும் ஆபத்தும் இருக்கிறது என்று நடிகை ரோஜா அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்