- Advertisement -
Homeபொழுதுபோக்கு12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி - அழுதுகொண்டே டயலாக் பேசினேன் -...

12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி – அழுதுகொண்டே டயலாக் பேசினேன் – அன்பே டயானா படத்தில் நடித்தது குறித்து பேசிய நடிகை ரோஜா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனர் ஆர்கே செல்வமணி இயக்கத்தில் செம்பருத்தி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ரோஜா. தனது நடிப்பு நடனத்திறமை வசீகரமான அழகால் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ரவுண்டு வந்தார். ரஜினி விஜயகாந்த் முரளி சத்யராஜ் பிரபு கார்த்திக் பிரபுதேவா என பல நட்சத்திர ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார்.

அதன்பிறகு இயக்குனர் ஆர்கே செல்வமணியை காதல் திருமணம் செய்துக்கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி 2 பிள்ளைகளுக்கு ரோஜா தாயானார். பிறகு ஆந்திரா அரசியலில் குதித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் எம்எல்ஏவாக சுற்றுலாத்துறை அமைச்சராகவும் கடந்த காலங்களில் இருந்தார். இப்போது ஆந்திராவில் ஆட்சி மாறிய நிலையில் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வந்து விட்டார்.

- Advertisement -

இயக்குனர் பாரி இளவழகன் அவர் இயக்கிய ஜமா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் அதிக கவனத்தை பெற்றவர். அவரே கதை திரைக்கதை எழுதி பாரி இளவழகன் கதாநாயகனாக நடித்த அன்பே டயானா என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தில் ரம்யா ரங்கநாதன் ரோஜா சேத்தன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் அன்பே டயானா படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகை ரோஜா. இந்த படத்தில் அவர் வக்கலங்கா சரளா என்ற கேரக்டரில் பவர்ஃபுல்லான ஒரு அம்மாவாக நடித்திருக்கிறார்.

- Advertisement -

பட விழாவில் அன்பே டயானா படத்தில் நடித்தது குறித்து நடிகை ரோஜா பேசியதாவது, படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் என் சொந்த குடும்பத்தில் என் பையன் பொண்ணு கணவர் செல்வாவோடு நான் எப்படி இருப்பேனோ அதுவே எனக்கு நினைவுக்கு வந்தது. குடும்ப பாசம் டாமினேஷன் கிளைமாக்ஸ்சில் கண்ணீர் வரவழைக்கும் காட்சிகள் என அனைத்தையும் இயக்குனர் பாரி அழகன் மிக அழகாக கொடுத்துள்ளார்.

இந்தப் படத்தில் என் மூத்த மகனாக பாரியும் இளைய மகனாக சுதர்சனமும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் டப்பிங் பேசும்போது எனக்கே கண்ணீர் வந்து விட்டது. கேமராமேன் ஷெல்லி ப்ரோ சிங்கிள் சாட்டுகளுக்காக கிம்பல் தூக்கிக்கொண்டு மிகவும் ரிஸ்க் எடுத்து உழைத்துள்ளார். மியூசிக் டைரக்டர் பரத் சங்கர் நல்ல பாடல்களை தந்துள்ளார். மிகவும் நிறைவாக இந்த படத்தில் நடித்ததாக உணர்கிறேன் என்று நடிகை ரோஜா அந்த விழாவில் நெகிழ்ச்சியாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்