முன்பெல்லாம் ஹீரோக்களுக்கு தான் தமிழ் சினிமாவில் நிறைய கவனிப்பும், முக்கியத்துவமும் இருந்தது. ரசிகர்கள், கதாநாயகி குறித்தெல்லாம் பெரியதாக கவனிக்க மாட்டார்கள். ஒரு கட்டத்தில், கவர்ச்சியை ரசிக்கும் ரசிகர்கள் தரப்பில் இருந்து மட்டும் தங்கள் அபிமான நடிகை படத்தில் இருக்கிறாரா என்பதை தெரிந்துக்கொள்ள ஆர்வம் காட்டுவர்.
ஆனால், இன்றைய நிலை அப்படியல்ல. நடிகர்களை போலவே, படத்தில் நடிக்கும் ஹீரோயின்களும் அதிக முக்கியத்துவம் பெற்று விடுகின்றனர். அதிலும் நயன்தாரா, திரிஷா போன்றவர்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி டிரண்டிங் ஆகி விடுகின்றனர். இவர்களுக்கு என தனியாக கதைகள் உருவாக்கப்பட்டு, ஹீரோ இல்லாமலேயே படம் எடுக்கப்படுகிறது. 96 படத்தை பொருத்த வரை படத்தின் ஹீரோ திரிஷா தான். விஜய் சேதுபதி, துணை நடிகர் போல தான் நடித்திருந்தார்.
நயன்தாராவும், பல படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தாலும் அவருக்கான காட்சிகள் அதிக முக்கியத்துவம் தரப்பட்டு எடுக்கப்படுகின்றன. படம் முழுக்க அவரே நடிக்கும்படியான சில படங்களும் வந்து வெற்றி பெற்று இருக்கின்றன. அப்படி ஹீரோக்களை போல, ஹீரோயின்களும் முக்கியத்துவம் பெற்றவர்களாகி விட்டனர்.
இந்த சூழலில் சமீபத்தில் வெளிவந்த லியோ படத்தில் திரிஷா, ரசிகர்களின் அதிக கவனத்தை ஈர்த்தார். அதுவும் விஜய், நான் லியோ இல்லை என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் காட்சியில், திரிஷா உதட்டு முத்தம் கொடுத்துவிட, பதிலுக்கு விஜயும் முத்தம் தர, இந்த காட்சியில் அது அவசியமே இல்லையே என்பதுதான் படம் பார்த்த பலரது எண்ணமாக இருந்தது. இது, நிச்சயம் விஜய் மனைவிக்கு பிடித்திருக்காது. நிச்சயம், இது வீட்டுக்குள் பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்கும்.
அதைத் தொடர்ந்து, இப்போது விடாமுயற்சி படத்தில் அஜீத்குமாருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இதில் வரும் பிளாஸ்பேக் காட்சியில் அஜீத் – திரிஷா கல்லூரி மாணவன், மாணவியாக நடிக்க உள்ளனர். அதற்காக, தன் எடையை திரிஷா குறைக்க உள்ளார். அஜீத் டீ ஏஜிங் மூலம் இளைஞராக மாற உள்ளார். இந்த படத்தில் லியோ படத்தை போல, ரொமான்ஸ் காட்சிகள் இடம்பெற உள்ளது. முரட்டு சிங்கிளாக இருக்கும் திரிஷா, முத்தக்காட்சிகள் பற்றி எல்லாம் கவலையே படுவதில்லை. முழு ஒத்துழைப்பை காட்டி, ஹீரோக்களை, ரசிகர்களை அசத்தி விடுகிறார்.
ஆனால், குடும்பஸ்தர்களான விஜய், அஜீத் போன்றவர்கள், இதுபோன்ற ரொமான்ஸ் பெர்மான்ஸ்சை ஷூட்டிங் ஸ்பாட்டில் காட்டிவிட்டு, வீட்டில் போய் செமத்தியாக மாட்டிக்கொள்கின்றனர். விடாமுயற்சி படப்பிடிப்பை முடித்துவிட்டு வீட்டுக்கு வரும்போது அஜீத், அவரது மனைவி ஷாலினியின் கோபத்தை எப்படி சமாளிக்க போகிறாரோ என பலரும் கிண்டலடித்து வருகின்றனர். அதனால், திரிஷாவுடன் ரொமான்ஸ் காட்சியை ரொம்ப தூக்கலாக வெச்சுடாதீங்கப்பா என, ஏகே ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.





