- Advertisement -
Homeபொழுதுபோக்குஆத்திரத்தில் ஓங்கி அறைந்த நடிகை ரோஜா, சுருண்டு விழுந்த நடிகை சில்க் ஸ்மிதா - இயக்குனர்...

ஆத்திரத்தில் ஓங்கி அறைந்த நடிகை ரோஜா, சுருண்டு விழுந்த நடிகை சில்க் ஸ்மிதா – இயக்குனர் ஆர்கே செல்வமணி போட்டுடைத்த உண்மை!

- Advertisement -

ஆர்கே செல்வமணி இயக்கத்தில் செம்பருத்தி படத்தின் மூலம் அறிமுகமானார் ரோஜா. ஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்த ரோஜாவின் உண்மைான பெயர் விஜயலட்சுமி. அவரை ரோஜா என பெயர் மாற்றி செம்பருத்தி படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தியவர் ஆர்கே செல்வமணி தான். பிறகு பல படங்களில் நடித்த ரோஜா ஒரு கட்டத்தில் ஆர்கே செல்வமணியை காதல் திருமணம் செய்துக்கொண்டார்.

இந்த நட்சத்திர தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். ஆந்திராவில் அரசியல் களத்தில் ஆர்வம் காட்டிய நடிகை ரோஜா ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக இருந்த கடந்த ஆட்சியில் விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் இருந்தார். இப்போது ஆட்சி மாறியதால் தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க வந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் ஆர்கே செல்வமணி நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, கேப்டன் விஜயகாந்த் படப்பிடிப்பில் இருக்கும் போது அங்குள்ள சிலர் மீது சின்னதாக கல் எறிவார். அந்த பழக்கம் அவரிடம் இருந்து எனக்கும் வந்துவிட்டது. நானும் அவரைப் போலவே இப்படி சின்ன கல்லை எடுத்து மற்றவர்கள் மீது எறிந்து கொண்டே இருப்பேன்.

அப்போது ஒரு நாள் அதிரடிப்படை படப்பிடிப்பில் கேமராமேன் பன்னீர்செல்வம் மீது கல் எறிந்த போது அது தவறுதலாக அருகில் இருந்த நடிகை சில்க் ஸ்மிதா மீது பட்டுவிட்டது. இவர் என்ன சொல்வாரோ என்ற ஒரு சின்ன பயம் எனக்கு வந்துவிட்டது. ஆனாலும் அவர் அதைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் என்னை பார்த்து சிரித்தார்.

- Advertisement -

இதை எனக்கு அருகில் இருந்த ரோஜா பார்த்துவிட்டார். நீ கல் எறிந்தது சரி. ஆனால் அவள் ஏன் உன்னை பார்த்து அப்படி சிரித்தாள் என்று கேட்டு பயங்கர கோபமாகி விட்டார். அதன் பிறகு ஜெயிலில் சில்க் ஸ்மிதாவை ரோஜா அறைவது போல் ஒரு காட்சியை படமாக்கினேன்.

கதைப்படி சிறையில் இருக்கும் ரோஜாவுக்கு சீனியர் கைதியான சில்க் ஸ்மிதா சிகரெட் கொடுத்து பிடிக்க சொல்லி வாயில் வைக்க வேண்டும். இந்த காட்சியை படமாக்கும் போது ரோஜா, சில்க் ஸ்மிதாவை வேண்டுமென்றே ஓங்கி ஒரு அறை விட்டார். அந்த அறையில் சில்க் ஸ்மிதா சுருண்டு விழுந்து விட்டார் என்று ஆர் கே செல்வமணி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்